சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகில் உள்ள பல நாடுகளில் பரவி மக்களை அச்சத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். தற்போது இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். இதனால் போக்குவரத்துகள், கடைகள், பொது இடங்கள், சினிமா படப்பிடிப்புகள் என அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது.

ஊரடங்கு உத்தரவினால் மக்களின் இயல்பு வாழ்கை மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு பிரச்சனை தலை தூக்கி ஆடுகிறது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் நாட்டுப்புற கலைஞர்கள், தெருக்கூத்து நடிகர்கள் உள்ளிட்ட 2000 குடும்பங்களுக்கு நடிகர் கருணாஸ் அவர்கள் உதவி செய்துள்ளார்.

Advertisement

தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. மேலும், இது குறித்து கருணாஸ் அவர்கள் அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, உலகம் முழுவதும் கொரோனாவின் ஆட்டம் அதிகரித்து இருப்பதால் மக்களின் நிலைமை மோசமாகி கொண்டு வருகிறது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டாலும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் இருக்கிறது. தமிழக மக்கள் எல்லோரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுச் சிறையில் வாழ்கிறார்கள். இதனால் பொருளாதார நெருக்கடி தொடங்கி உள்ளது. நாளுக்கு நாள் மக்களின் உணவு தட்டுப்பாடு பிரச்சனை அதிகரித்து கொண்டே செல்கிறது. மக்கள் பலர் வாழ்வாதார பிரச்னைக்குள் சிக்கி தவிக்கின்றனர்.

Advertisement

கொரோனாவினால் எதிர்காலத்தில் வரும் நிலை மிகவும் மோசமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. இந்நிலையில் தமிழகம் எங்கும் வாழும் நாடக நடிகர்கள், தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளிட்ட நாட்டுபுற கலைஞர்கள் எல்லாம் குறைந்த பட்ச அரசு நிதி உதவிகளை பெற்றாலும் பலருக்கு அந்த உதவி கிடைக்கவில்லை. மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாழும் நாடக நடிகர்கள் உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் நிவாரண பொருட்கள் மற்றும் நிதி வழங்கி உள்ளார்.

Advertisement

அவர் 7000 கிலோ அரிசி, மளிகைச்சாமன்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிப் பொருள்கள் மற்றும் ஒரு சில மாவட்டங்களில் தலா ரூ. 500 ரூபாயும் நடிகர் கருணாஸ் வழங்கியுள்ளார். நடிகர் கருணாஸின் இந்த செயலை பார்த்து பலரும் அவரை பாராட்டி வருகிறர்கள். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகர் கருணாஸ். ஆரம்பத்தில் இவர் நடிகர் என்பதை விட நாட்டுப்புற கலைகளையும் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement