பிரபல தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா மீது அவரது வீட்டில் பணிபுரியும் பணியாளரின் குடும்பத்தினர் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழில் மிகவும் பிரபலமான ஒரு தயாரிப்பாளராக திகழ்ந்து வருபவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இவர் பிரபல நடிகர் சிவகுமாரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. அமீர் இலக்கிய பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான இவர் அதன் பின்னர் ஸ்டுடியோ கிரீன் என்ற நிறுவனத்தின் மூலம் பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார்.

கடந்தாண்டு இவருக்கும் அமீருக்கும் ஏற்பட்ட பிரச்சனைகள் தான் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது. இயக்குனர் அமீர் குறித்து இவர் வைத்த குற்றச்சாட்டுகளால் பல்வேறு இயக்குனர்களும் இவருக்கு எதிராக திரும்பி இருந்தார்கள். இதனை தொடர்ந்து இந்த விவாகரத்தில் வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டு இந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்தார் ஞானவேல் ராஜா.

Advertisement

இப்படி ஒரு நிலையில் இவரது வீட்டில் பணிபுரியும் பெண் ஒருவர் தற்கொலைக்கு மோகன் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை தியாகராய நகரில் ஜெகதீஸ்வரன் தெருவில் ஞானவேல் ராஜா வீடு இருக்கிறது. அங்கே தன்னுடைய குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவரது வீட்டிலிருந்து நகைகள் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தன்னுடைய வீட்டில் வேலை செய்த லட்சுமி என்பவர் மீது ஞானவேல் ராஜாவின் மனைவி நேகா சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் லட்சுமி இடம் காணாமல் போன நகைகள் குறித்து விசாரித்திருக்கிறார் இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் முதல் லட்சுமி பணிக்கு வராமல் இருந்துள்ளார். மேலும் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது அவரின் செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்த நிலையில் லட்சுமி மீது மேலும் சந்தேகம் அடைந்த நேகா இது குறித்து ஞானவேல் ராஜாவிடம் தெரிவித்திருக்கிறார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து நகைகள் காணாமல் போனது குறித்து மாம்பழம் காவல் நிலையத்தில் லட்சுமி மீது புகார் அளித்திருக்கிறார்.இதனைத் தொடர்ந்து லஷ்மியை காவல் நிலையத்திற்கு அழைத்து காணாமல் போன நகை குறித்து போலீசார் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இந்த விசாரணை நடைபெற்ற அடுத்த நாளில் லட்சுமி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த உறவினர்கள் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர்.

தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் லட்சுமி தற்கொலைக்கு முயன்றதற்கு காரணம் ஞானவேல் ராஜா மற்றும் அவரது மனைவி நேகா உள்ளிட்டோர் தான் காரணம் என்று மாம்லம் காவல் நிலையத்தில் லட்சுமியின் மகள் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில் ஞானவேல் ராஜாவின் மனைவி நேகா நகைகளை வேறு இயங்கோ தொலைத்து விட்டு தன்னுடைய தாயார் மீது பழி போட்டு அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார்.

Advertisement