இந்த வயதில் காது குத்திக்கொண்டு கிடா விருந்து ஏற்பாடு செய்துள்ள காமெடி நடிகர் கிங் காங்.

0
337
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நகைச்சுவை நடிகர் கிங் காங். இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதுமட்டும் இல்லாமல் இவருடைய உண்மையான பெயர் பாதி பேருக்கு தெரியாது. நடிகர் கிங் காங் உடைய உண்மையான பெயர் ‘சங்கர்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்து வெற்றி நடை போட்ட ‘அதிசய பிறவி’ என்ற படத்தின் மூலம் தான் நடிகர் கிங் காங் அவர்கள் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-
மூத்த மகள்

இந்த படத்தில் நடிகர் கிங் காங் ஆடிய டான்ஸ் இப்போது பார்த்தால் கூட சிரிப்பை அடக்க முடியாது. அந்த அளவிற்கு தூளாக இருந்தது.பிறகு தான் நடிகர் கிங் காங் அவர்களுக்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் நிறைய வந்து குவிந்தன. இதுவரை இவர் ஐந்து மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் தன்னுடைய நடிப்பு திறனால் மக்களிடையே பாராட்டுகளை பெற்றவர். வாழ்த்துக்கள்

- Advertisement -

கிங் காங் செய்த சாதனை:

மேலும், இவர் நடித்த படங்களின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றவர்.இவர் அதிகமாக காமெடி நடிகர் வைகை புயல் வடிவேலுடன் இணைந்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் பயங்கரமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் சிரித்து சிரித்து வயிறு வலிக்கும் அளவிற்கு இவரின் காமெடி இருக்கும். மேலும், நடிகர் கிங் காங் அவர்கள் 1990 கால கட்டங்களில் தமிழ் சினிமா உலகில் பிரபலமான கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார்.

கிங் காங் குடும்பம்:

அதோடு நடிகர் கிங் காங் அவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலூரில் உள்ள ஒரு பல்கலை கழக கல்லுரில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கி இருந்தார்கள்.இதனைத் தொடர்ந்து சினிமாவில் இவருடைய நடிப்புத் திறனுக்காக தேசிய விருது வழங்கி உள்ளார்கள். இது ஒரு பக்கம் இருக்க இவர் கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கிங் காங் தனது மகனுடன் கலந்து விளையாடி இருந்தார். ஆனால், இவருக்கு இன்னும் இரண்டு பெண்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் +2 தேர்வில் காமெடி நடிகர் கிங் காங்கின் மகள் 404′ மார்க் வாங்கி, பாஸ் ஆகியுள்ளார். இன்று வெளியான தேர்வு முடிவில், நல்ல மார்க் வாங்கி, பாஸ் ஆனதில் நடிகர் கிங்காங் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

காது குத்திய கிங் காங் :

இப்படி ஒரு நிலையில் நேற்று அக்ஷய்திருதியை முன்னிட்டு ‘காதுகுத்தி கடுக்கன்’ அணிந்துக் கொண்டுள்ளார். நகைக்கடை சென்று, தனது நீண்ட கால ஆசையை நிறைவேற்றினார் கிங்காங். வழக்கமாக கடா வெட்டி, காது குத்துவார்கள். இவரோ காது குத்திய பிறகு, அடுத்த வாரம் தனது சக நடிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு ‘கடா விருந்து’ வைக்க உள்ளார் கிங் காங்

Advertisement