திரைப்படத்துறையில் நடித்த ட காமெடி நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமா துறையில் நடிப்பு, அழகு தாண்டி திறமையும் உண்டு என்பதை பல நடிகர்கள் நிரூபித்திருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் நடிப்பு, திறமையும் உயரத்திற்கு சம்மந்தம் இல்லை என்று பல கலைஞர்கள் நிரூபித்து இருக்கிறார்கள். அதில் சில கலைஞர்கள் உயரம் குறைவாக இருந்தாலும் தங்களின் திறமையை வெளிப்படுத்தி மக்களை சிரிக்க வைத்தார்கள். குள்ளமணி போன்ற பல கலைஞர்கள் தங்களுடைய உயரம் குறைவான குறையை மறந்து மறைத்து மக்களை சிரிக்க வைத்து இருக்கிறார்கள்.

அவர்களில் மூன்று அடி உயரம் கொண்ட காமெடி நடிகராக இருந்தவர் தான் லிட்டில் ஜான். இவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் சில படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு அல்லி நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர். இவருடைய உண்மையான பெயர் தனசேகரன். ஆனால், இவரை பலரும் லிட்டில் ஜான் என்று தான் அழைப்பார்கள்.

Advertisement

லிட்டில் ஜானின் திரைபயணம்:

சினிமாவில் சில காலம் இருந்த லிட்டில் ஜான் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சினிமாவில் இருந்து விலகி விட்டார். மேலும், இவர் வெங்காயம், ஐம்புலன் ஆகிய திரைப்படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். பின் இவர் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். இவர் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்தாலும் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று நடிப்பது தான் இவருக்கு ரொம்ப பிடிக்குமாம். இந்த ஊர் கலை நிகழ்ச்சியாக இருந்தாலும் பங்கு பெறுவார் லிட்டில் ஜான்.

லிட்டில் ஜான் கலந்து கொண்ட நிகழ்ச்சி:

மேலும், இவர் கிராமங்கள்தோறும் கோவில் திருவிழாக்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் லிட்டில் ஜான் திருச்சங்கோடு பகுதியில் பள்ளிப்பாளையம் அருகே உள்ள மோடமங்கலம் என்கிற கிராமத்தில் நடந்த மாரியம்மன் கோவில் பண்டிகை விழாவிற்கு சென்று இருந்தார். கோவில் திருவிழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சியிகள் நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சியில் வழக்கம் போல் நடிகர் லிட்டில் ஜான் கலந்து கொண்டு இருந்தார்.

Advertisement

லிட்டில் ஜான் காலமான செய்தி:

பின் கலை நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர் வீட்டில் வந்து தூங்கினார். அடுத்த நாள் காலையில் வெகுநேரமாகியும் அவர் எழவில்லை. இதனை அடுத்து அவரின் நண்பர்கள், குடும்பத்தினர் எல்லோரும் அவருடைய அறைக்கு சென்று இருந்தனர். அங்கு பார்த்த போது வாயிலும் மூக்கிலும் ரத்தம் வந்த நிலையில் லிட்டில் ஜான் இருந்தார். பின் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.

Advertisement

லிட்டில் ஜான் இறுதி சடங்கு:

மேலும், லிட்டில் ஜான் இறந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் லிட்டில் ஜானின் இறுதி சடங்கை அவருடைய சொந்த ஊரான அள்ளி நாயகன் பாளையத்தில் நடத்தியிருந்தார்கள். இவருடைய இறுதி சடங்கில் கலைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு தங்களுடைய இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

Advertisement