முஸ்லிம் மதத்தில் இருந்து இந்துவாக இசையமைப்பாளர் ஜிப்ரான் மாறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிப்ரான். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியாகியிருந்த வாகை சூடவா என்ற படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார்.

முதல் படத்திலேயே இவருடைய பாடல்களை எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அது மட்டும் இல்லாமல் இவர் நிறைய விருதுகளும் வாங்கி இருந்தார். இதை தொடர்ந்து இவர் வத்திக்குச்சி, திருமணம் எனும் நிக்கா, குட்டி புலி, அமர காவியம், உத்தம வில்லன், பாபநாசம், அறம், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், துணிவு போன்ற பல படங்களில் சூப்பர் ஹிட் படங்களை கொடுக்கிறார்.

Advertisement

கிட்டத்தட்ட இவர் 50 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். தமிழ் சினிமா இவருடைய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. சமீபத்தில் வெளியாகியிருந்த குரங்கு பெடல் என்ற படத்துக்கும் இவர் தான் இசையமைத்திருந்தார். இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் குரங்கு பெடல். இந்த படத்தில் காளி வெங்கட், சந்தோஷ் வேல்முருகன், பிரசன்னா பாலச்சந்தர் உட்பட பல நடிகர்கள் இருக்கிறார்கள்.

ராசி அழகப்பன் எழுதிய சைக்கிள் சிறுகதையை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் எடுத்திருக்கிறார். இந்த படத்தை சிவகார்த்திகேயன் வெளியிட்டு இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்கள் இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

ஜிப்ரான் பேட்டி:

இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜிப்ரான், இஸ்லாம் மதத்தை பாலோ பண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், கடைசி மூன்று, நான்கு வருடங்களாக நான் மீண்டும் இந்துவாக மாறிவிட்டேன். சட்டபூர்வமாகவும் எல்லா மாற்றங்களும் செய்து விட்டேன். ஆனால், இதுவரை என்னுடைய படங்களில் மட்டும் ஜிப்ரான் என்ற பெயரை பயன்படுத்தி வந்தேன். குரங்கு பெடல் படத்தில் ஜிப்ரான் வைபோதா என்று என்னுடைய புது பெயரை போட்டு இருந்தேன். Ghibran Again Converted To Hindhu

Advertisement

பெயர் மாற்றம் காரணம்:

பெயர் மாற்றம் தொடர்பாகவும் பேட்டியில் விளக்கம் கொடுத்து விட்டேன். குரங்கு பெடல் எனக்கு மனதுக்கு நெருக்கமான படமாக இருக்கிறது. இந்த படத்தில் இருந்து அப்பா பெயரையும் என்னுடைய பெயருடன் சேர்த்து விடலாம் என்று முடிவு செய்தேன். என்னுடைய தந்தையின் பெயர் கணேஷ் பாலாஜி வைபோதா. வைபோதா என்பது விழித்தெழுதல் என்று அர்த்தம். இதனால் குரங்கு பெடல் படத்தில் இருந்து என்னுடைய புது பெயரை பயன்படுத்த முடிவு செய்தேன். இனி நான் எல்லா படங்களிலும் ஜிப்ரான் வைபோதா என்ற பெயரை தான் பயன்படுத்த இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement