இந்த நடிகை சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தங்கச்சியாம்..? புகைப்படம் உள்ளே

0
1800
Mahesh babu

தெலுங்கு திரையுலகில் தனக்கென்று தனி முத்திரையை பதித்த நடிகர் மகேஷ்பாபு. தெலுங்கு திரைப்பட உலகில் சிறு வயது முதல் பெரியவர்கள் வரையிலான அனைத்து தரப்பினரையும் ரசிகராக கொண்டவர். சிறுவயது முதலே குழந்நை நட்சத்திரமாக திரைத்துறையில் வலம்வந்து பின்னர் படிப்படியாக இன்று இந்த நிலையில் உள்ள மிகப்பெரும் நடிகர்.

Kaumudi Nemani

சமீபத்தில் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வெளிவந்த திரைப்படம் ஸ்பைடர். பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பிரம்மாண்ட வெற்றியை
பெறவில்லை.இந்நிலையில் மகேஷ்பாபு தற்போது “Bharat Ane Nenu” என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.விரைவில் திரைக்கு வெளிவரவுள்ள இந்தபடத்தில் முன்னனி தெலுங்கு டிவி நடிகையான “கௌமுதி நேமானி” ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Kaumudi Nemani actress

கௌமுதி நேமானி ஏற்கனவே ஒருசில தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் கூட மகேஷ் பாபு நடித்துள்ள படத்தில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளாராம். இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குனர் சிவாவிற்கு கௌமுதி நேமானி சமூகவலைத்தளத்தில்
நன்றி கூறியுள்ளார்.