நடிகர் முரளியின் மகன தெரியும், ஆனால் அவரது மகளை பார்த்துளீர்களா ? – இதோ புகைப்படம்.

0
795
Murali
- Advertisement -

தென்இந்திய சினிமா திரை உலகில் 80,90களில் நடித்த முன்னணி நடிகர்களுள் ஒருவர் தான் நடிகர் முரளி. இவரை அதிகம் இதயம் முரளி என்று தான் அழைப்பார்கள். முரளி அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். இவர் 70க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதோடு தமிழ் திரை உலகிற்கு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பூவிலங்கு’ என்னும் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதற்கு பின்னர் 1990ல் புதுவசந்தம், 1990-இல் இதயம் என்ற படத்தின் மூலம் தான் இவர் மக்களிடையே அதிகமாக பிரபலமானார். அது மட்டும் இல்லாமல் ‘கடல் பூக்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் இவருக்கு தமிழக அரசு நடிகர் முரளிக்கு சிறந்த நடிகர் என்ற பட்டத்தை வழங்கியது. இப்படி தமிழ் சினிமாவின் கருப்பு வைரமாக இருந்து வந்த முரளி கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி யாரும் நினைத்துப் பார்க்காத அளவில் சோகம் நடந்தது. முரளிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

- Advertisement -

அதர்வா :

முரளி அவர்கள் ஷோபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அதர்வா, ஆகாஷ் என்ற இரு மகன்களும். காவியா என்ற மகளும் உள்ளார்கள். ஆதரவா தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அதர்வா. வித்தியாசமான கதை தேர்வின் மூலம் பிரபலமான நடிகராக தமிழ் சினிமாவில் உருவெடுத்து இருப்பவர் அதர்வா. 2010ஆம் ஆண்டு வெளிவந்த பானாகாத்தாடி என்ற படத்தின் மூலம் தான் அதர்வா தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்பு குதிரை, சண்டிவீரன், ஈட்டி, கணிதன், பூமராங், இமைக்காநொடிகள் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சில முக்கிய படங்களில் அதர்வா நடித்து கடந்த ஆண்டு வெளியான பட்டத்து அரசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

அடுத்து நடிக்கும் படங்கள் :

மேலும் நடிகர் அதர்வா தற்போது வணங்கான், ஆட்ட்ர்ஸ், நிறங்கள் மூன்று, தன்னால் என பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இப்படி தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இருக்கும் அதர்வாவை தமிழ் சினிமாவில் பலருக்கும் தெரியும். ஆனால் அவரது சகோதரிகளை பார்த்திருப்பது குறைவுதான்.

வைரலாகும் புகைப்படம் :

இந்நிலையில் தான் அதர்வாவின் சகோதரி காவியாவின் புகைபடம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அதோடு அவர்களது குடும்ப புகைப்படமும் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் முரளியின் இளைய மக்கள் ஆகாஷ் விஜய் நடித்த “மாஸ்டர்” படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோவின் மகா சினேகன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடதக்கது

Advertisement