அஜித், சூர்யா, விஷால் பட நடிகரின் தாயார் காலமானார் – திரையுலகினர் அஞ்சலி.

0
10112
muralisharma
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் முரளி சர்மா. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். இவர் 2002 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த Dil Vil Pyar Vyar என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். இவர் பெரும்பாலும் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து உள்ளார். இவர் தமிழில் பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்த ‘தோனி’ படம் மூலம் தான் அறிமுகமானார்.

-விளம்பரம்-
Bollywood News In Hindi : Golmaal fame actor Murali Sharma mother ...

பின் இதனை தொடர்ந்து ஆரம்பம், பட்டத்துயானை, பாயும்புலி, அஞ்சான், தேவி என பல படங்களில் நடித்து உள்ளார். அதோடு இவர் படத்துக்கு படம் வித்தியாசமான வேடங்களில் நடித்து ரசிகர்களை அசரடித்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி என பல மொழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

- Advertisement -

கடந்த ஆண்டு தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜூனுடன் இவர் நடித்திருந்த அல வைக்குந்தபுரமுலோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் முரளி சர்மா அவர்களின் தாயார் பத்மா சர்மா நேற்று (09/06/2020 ) உயிர் இழந்தார். தாயார் பத்மா சர்மா அவர்கள் தனது வீட்டில் இருக்கும் போதே திடீரென்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது.

பின் அவர் மரணமடைந்தார். இதை அறிந்த பல மொழி பிரபலங்கள் பலரும் நடிகர் முரளி சர்மாவிற்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் நடிகர் முரளி சர்மா தாயார் பத்மா சர்மா அவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement