இந்த நடிகர் பிரபல நடிகர் நாசரோட மகனா ? யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே

0
1685
Actor Naasar
- Advertisement -

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்து வருபவர் நடிகர் நாஸர். நாஸருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். முதல் மகன் அப்துல் அஸான் பைசல், இரண்டாவது மகன் லுத்புதீன், மூன்றாவது மகன் அபி மெஹதீ ஹசன்.

luthfudeen

மூவருமே தனது தந்தையை போலவே படங்களில் நடித்து வருகின்றனர். முதல் மகனுக்கு சென்ற வருடம் ஒரு மிகப்பெரிய சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து தற்போது தேறி வருகிறார்.

- Advertisement -

இரண்டாவது மகன் லுத்புதீன் 2014ல் இருந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் 1994ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த சைவம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்த படத்தில் நாஸரின் பேரனாக நடித்திருப்பார் லுத்புதீன்.

luthfudeen-basha

naasar-son

ஆனால், இந்த படத்தில் நடிக்கும் முன்னர் தன் அப்பாவிடம் சொல்லாமலே ஏ.எல்.விஜய்யிடம் ஒப்பந்தம் செய்துள்ளார். ஏனெனில் படங்களில் நடிக்கும் முன் ஒவ்வொருவரும் பயிற்சி பெற வேண்டும் என்பது நாஸரின் கொள்கையாகும். ஆனால், எந்த ஒரு பயிற்சியும் பெறாமல் படத்தில் நபிக்க ஒப்புக்கொண்ட லுத்புதீன் நன்றாகவும் நடித்து தன் அப்பாவிடம் பாராட்டும் பெற்றுவிட்டார்.

அதன்பின்னர், இது என்ன மாயம், பறந்து செல்லவா, மகளிர் மட்டும் ஆகிய படங்களில் நடித்தார் லுத்புதீன். இதில் பறந்து செல்லவா படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேசுக்கு ஹீரோவாக நடித்தார்.

naasar-son-luthuffudeen

தற்போது நல்ல கதைக்காக காத்துக்கொண்டிருக்கிறார் லுத்புதீன்.

Advertisement