அடிமையாக, உணவு,உடையின்றி சம்பளம் இல்லாமல் வேலை செய்கிறேன். நடிகர் நகுல் பதிவு.

By Rajkumar · 26/2/2020

அட்அட்றா நாக்க முக்கா நாக்க முக்கா' என்ற பாடலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் நடிகர் நகுல். இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதோடு தன்னுடைய முதல் படத்திலேயே ஒரு பாடலையும் பாடி உள்ளார். அதை விட நடிகர் நகுல் அவர்கள் தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை தேவயானியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. இது பலருக்கும் தெரிந்தது தான். நகுல் அவர்கள் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், நாரதன், பிரம்மா டாட் காம், செய், எரியும் கண்ணாடி போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.

https://www.instagram.com/p/B8_SknWlpnD/

மேலும், நகுல் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல், பின்னணி பாடகரும் ஆவார். இவர் பல படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக விக்ரம் நடிப்பில் வந்த அந்நியன் படத்தில் காதல் யானை என்ற பாடலை இவர் தான் பாடியது. இதனை தொடர்ந்து கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன், காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம், கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஆகிய படங்களுக்கு பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளார். நடிகர் நகுல் அவர்கள் சுருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் இவருக்கு பெரிதாக சினிமாவில் பட வாய்ப்புகள் அமையாததால் தற்போது நகுல் அவர்கள் சின்னத்திரை நோக்கியும் பயணம் செய்து வருகிறார்.

இதையும் பாருங்க : பல ஆண்டுகளுக்கு முன்னர் தாஜ் மஹால் முன்பு தனது பெற்றோர்களுடன் சேரன் எடுத்த புகைப்படம்.

அதாவது தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராக நகல் பங்கு பெற்று வருகிறார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் vs டான்ஸ் என்ற நிகழ்ச்சியின் நடுவராகவும் உள்ளார். நகுல் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். அடிக்கடி இவர் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவார்.

https://www.instagram.com/p/B86IS7VFNl2/

இந்நிலையில் நடிகர் நகுல் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிரைவர் கெட்டப்பில் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதில் அவர் கூறியிருப்பது, என் மனைவி கார் டிரைவர் ஆகிவிட்டேன். சம்பளம் இல்லை, இது அடிமைத்தனம், சாப்பாடு இல்லை, நல்ல உடை இல்லை, மோசமான பாஸ், நம்புங்க என கிண்டலாக பதிவிட்டு உள்ளார். இவர் இப்படி வேடிக்கை தனமாக பதிவிட்ட கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full