பல ஆண்டுகளுக்கு முன்னர் தாஜ் மஹால் முன்பு தனது பெற்றோர்களுடன் சேரன் எடுத்த புகைப்படம்.

0
1851
Cheran

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் சேரனும் ஒருவர். சேரன் அவர்கள் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் ஆட்டோகிராப், சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். மேலும், சேரன் அவர்கள் பல படங்களுக்காக தேசிய விருதுகளை வாங்கி உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் சேரன் உடைய படங்கள் எல்லாம் தோல்வி அடைந்ததால் சிறிது காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். சேரன் அவர்கள் கடைசியாக திருமணம் என்ற படத்தை தான் இயக்கி இருந்தார்.

அதற்கு பின் தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பொதுவாகவே பிக் பாஸ் வீட்டில் வயதில் அதிகம் உள்ளவர்கள் கலந்து கொண்டால் 50 நாட்களுக்குள்ளேயே எலிமினேட் செய்யப்படுவார்கள். ஆனால், சேரன் அவர்கள் தன்னுடைய விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் தான் 90 நாட்கள் வரை பயணம் செய்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சேரன் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சேரன் அவர்கள் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்து உள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : படம் வெளியாகி சில நாட்களிலேயே திருமணத்தை முடித்த இளம் நடிகை.

இந்த படத்தில் சேரனுக்கு ஜோடியாக சராயூ நடித்து உள்ளார். இந்த படத்தில் நடிகர் இர்பான் அவர்கள் வில்லனாக நடித்து உள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே வர்மா ஆகியோர் நடித்து உள்ளார். மேலும், இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது சேரன் அவர்கள் ஒரு புதிய படத்தை இயக்குவதற்கான ஸ்கிரிப்டை தயார் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. சேரன் இயக்கும் இந்த புதிய படத்தில் விஜய் சேதுபதியும், சிம்புவும் இணைந்து நடிப்பதாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் சேரன் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதை பதிவிட்டு சேரன் அவர்கள் கூறியது, இவை என்னுடைய அலுவலக அறையை அலங்கரிக்கும் பொருட்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். அது சேரன் அவர்கள் தன் தாய், தந்தையுடன் தாஜ்மஹாலில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம். மேலும், சேரன் அவர்கள் தன்னுடைய அலுவலகத்தில் இன்னும் யார் யாருடைய புகைப்படங்கள் இடம்பெற போகிறது என்பதையும் கூறியுள்ளார்.

Advertisement