சிறு வயது முதல் அமெரிக்காவில் இருக்கும் என் மகன் முதன் முறையாக தமிழில் பாடினான் - வீடியோவை பகிர்ந்து நெப்போலியன் நெகிழிச்சி.

By Ajju · 9/8/2022

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நடிகர் நெப்போலியன். நடிகர் நெப்போலியன் 1963ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் குமரேசன் துரைசாமி. இவரது குடும்பத்தில் 6 குழந்தைகள். இவர் 5வது மகனாக பிறந்தார். திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தார். பின்னர் தனது 27 வயதில் உதயம் என்ற படத்தினை பார்த்து இவருக்கு நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. பின் போராடி 1991ல் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 'புது நெல்லு புது நாத்து’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதன் பின்னர் இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இதுவரை கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், நெப்போலியன் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார்.

இதையும் பாருங்க : அதை பார்த்த பின்னர் தான் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தேன் - தன் மகன் கந்தன் குறித்து பேசிய கார்த்தி.

நெப்போலியனின் குடும்பம்:

தற்போது இவரது குடும்பம் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் வசித்து வருகின்றனர். நெப்போலியன் அவர்களுக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என இரண்டு மகன்களும் உள்ளனர். இவருடைய மூத்த மகன் தனுஷுக்காக தான் இவர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளனர். நடுவில் சிறிது காலம் நெப்போலியன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார். தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து கலக்கி கொண்டு வருகிறார். அதுமட்டும் இல்லாமல் நடிகர் நெப்போலியன் அவர்கள் ஹாலிவூட் படத்தில் நடித்து உள்ளார்.

நெப்போலியன் நடித்த ஹாலிவுட் படம்:

அந்த ஹாலிவுட் படத்தின் பெயர் கிறித்துமஸ் கூப்பன். டேனியல் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் கோர்ட்னி டேனியல் ஷீனா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் நெப்போலியனுக்கு ஜோடியாக வெனிசுலா அழகி நடித்துள்ளார். நெப்போலியனுக்கு இது இரண்டாவது ஹாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த கிறித்துமஸ் கூப்பன் படத்தில் ஒரு அழுத்தமான கதையில் நெப்போலியன் நடித்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் அடுத்த அடுத்த படத்திலும் நெப்போலியன் ஹீரோவானாலும் ஆச்சர்யமில்லை என்று கூறப்படுகிறது.

நெப்போலியனின் திரைப்பயணம்:

பின் தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து இருந்த சுல்தான் என்ற படத்தில் நெப்போலியன் நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில் நெப்போலியன் குடும்ப புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இவருக்கு தனுசு, குணால் என்ற 2 மகன்கள் இருப்பது தெரியும். அதில் இளையவரான தனுசு நடக்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்காக தான் இவர்களுடைய மொத்த குடும்பமே அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார்கள். அங்கு தனுஷிற்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டு வருகிறது.

View this post on Instagram

A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy)

மகனின் 24வது பிறந்தநாள் :

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் நெப்போலியன் மகன் தனது 24வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். அந்த வீடியோவை பகிர்ந்த நெப்போலியன் 'அன்பு நண்பரகளே , தமிழ்ச் சொந்தங்களே, நேற்றைய தினம் எங்கள் மூத்த மகன் Dhanoosh உடைய 24வது பிறந்தநாளை அவனை மகிழ்விப்பதற்காக சிறப்பாக கொண்டாடினோம். சிறு வயது முதல் அமெரிக்காவில் வாழ்வதால் ஆங்கில பாடல்களையே அதிகம் பாடிக்கொண்டிருக்கும் எங்கள் இளைய மகன் குணால் அவனது அண்ணனுக்காக ஒரு தமிழ்பாட்டு பாடி எங்கள் எல்லோரையும் மகிழ்வித்தான்'

behindtalkies AMP · Quick view
View full