அதை பார்த்த பின்னர் தான் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தேன் – தன் மகன் கந்தன் குறித்து பேசிய கார்த்தி.

0
1150
karthi
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியும் அடக்கம். தமிழ் சினிமாவின் 80 காலகட்டம் துவங்கி இன்று வரை பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகுமார். இவரது மகன்களான சூர்யா, கார்த்தி இருவருமே இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர்களாக திகழ்ந்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். கார்த்தியின் மூத்த மகனான சூர்யா ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார். மேலும், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கார்த்தியின் மனைவி மற்றும் மகள் :

அதே போல கார்த்தி நடிகர் கார்த்தி கடந்த 2011-ம் ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் பார்த்து நிச்சயித்த இந்தத் திருமணம் கோயம்புத்தூரில் நடந்தது. ரஞ்சனி கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர். இத்தம்பதியருக்கு 2013-ம் ஆண்டு இவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தனர். அவருடைய பெயர் உமையாள். இப்படி ஒரு நிலையில் கார்த்தியின் மனைவி இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : அதிதியால் பறிபோன விருமன் பட வாய்ப்பு ? ஏமாற்றத்தில் புலம்பிய சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி ?

இரண்டாவதாக பிறந்த மகன் :

இப்படி ஒரு நிலையில் நடிகர் கார்த்தி மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்து இருந்தது. அதை தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி தெரிவித்து இருந்தார் கார்த்தி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நாங்கள் ஆண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டு நிற்கிறோம் இந்த நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நன்றி கூறிக் கொள்கிறேன் எங்களின் மகனுக்கு உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களையும் கேட்டுக்கொள்கிறேன் கடவுளுக்கு நன்றி. என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Kandhan (Karthi Son) Wiki, Biography, Age, Family, Images - News Bugz

இரண்டாம் மகன் கந்தன் :

மேலும், தனது மகனுக்கு ‘கந்தன்’ என்று முருகப்பெருமானின் பெயரை வைத்துள்ளார் கார்த்தி. இது குறித்து தனது சமுக வலைதளத்தில் பதிவிட்டு இருந்த கார்த்தி, கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக “கந்தன்” என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும். அன்புடன்… அப்பா.என்று பதிவிட்டு இருந்தார். சிவகுமாரின் குடும்பம் முருக பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள்.

முருக கடவுள் மீது கொண்டுள்ள பக்தி :

சூர்யாவின் உண்மையான பெயர் கூட முருக கடவுளின் பல பெயர்களில் ஒன்றான சரவணன் தான். மேலும், கார்த்தி என்பது முருக கடவுளின் மற்றொரு பெயரினை கார்த்திகேயன் என்ற பெயரின் சுருக்கம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் கார்த்தி தன் மகனுக்கும் முருக பெருமானின் பெயரை வைத்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ள காரணம் குறித்து விருமன் பட விழாவில் பேசி இருக்கிறார் கார்த்தி

இரண்டாம் குழந்தைக்கு காரணம் :

நான் ஒரு பொண்ணு போதும் என்று தான் நினைத்தேன் ஆனால் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது என் மகளை கூட பார்க்காமல் என் மனைவி என்னுடன் வந்து இருந்தார் அதேபோல என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத போது என்னால் செல்ல முடியவில்லை அப்போது அவரின் தம்பி என் மனைவியுடனே இருந்தார். அவனுக்கு இன்னும் இரண்டு வாரத்தில் திருமணம் குழந்தை வேண்டும் என்று நினைத்து போது தான் கந்தன் வந்தான்.

Advertisement