மாஸ்க்கு இங்க போங்க-சானிடைசருக்கு இப்படி போங்க- வித்யாசாமாக திருமணத்தை முடித்த நடிகர்.

0
922
- Advertisement -

நாடு முழுவதும் கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் மக்களும், அரசாங்கமும் கவலையில் உள்ளவர்கள். இந்த கொரோனா பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல சுபகாரியங்களும் தடைப்பட்டுள்ளது. பல பிரபலங்கள் தங்களின் திருமணங்களை ஒத்தி வைத்துள்ளனர். இருந்தாலும் சில பேர் எளிமையாக கோவில்களில் அரசாங்க அறிவுரையின்படி திருமணங்களை செய்து உள்ளார்கள்.

-விளம்பரம்-
Image

அந்த வகையில் தற்போது தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த் அவர்கள் தன்னுடைய திருமணத்தை பண்ணை வீட்டிலேயே எளிமையாக செய்து கொண்டார். உதவி இயக்குனராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் நிகில் சித்தார்த். பின்பு ஹேப்பி டேஸ் என்ற படம் மூலம் சினிமாவில் ஹீரோ ஆனார். இதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து உள்ளார். மேலும், நடிகர் சித்தார்த் அவர்கள் பல்லவி வர்மா என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தார்.

- Advertisement -

இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டினார்கள். இதனை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரல் 16ம் தேதி திருமணம் நிச்சயக்கப்பட்டது. இவர்களுடைய திருமணத்தை வெளிநாட்டில் நடத்த முடிவு செய்தார்கள். ஆனால், கொரோனா பிரச்சினை காரணமாக திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்தப் பிரச்சினை முடிந்த பிறகு தான் திருமணம் நடக்கும் என்றும் கூறி இருந்தார்கள். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள நிக்கிலின் பண்ணை வீட்டில் இவர்கள் திருமணத்தை இன்று காலை 6.30 மணி அளவில் எளிமையான முறையில் நடத்தினார்கள்.

nikhil siddharth

இவர்களுடைய திருமணத்தில் இரு வீரர்கள் மட்டுமே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளன. கொரோனா பிரச்சனை எல்லாம் தீர்ந்த பிறகு தான் ஹைதராபாத்தில் இவர்கள் திருமண வரவேற்பை நடத்த உள்ளதாக நடிகர் நிகில் அறிவித்துள்ளார். நடிகர் நிகில் மற்றும் பல்லவிக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இவர்களுடைய திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மாஸ்க், சானிடைசர் ஆகியவை வழங்கப்பட்டது.

-விளம்பரம்-
Advertisement