வளையல் வியாபாரம் to சினிமா வாய்ப்பு - பாண்டியன் மகன் எஸ்க்குளூசிவ் பேட்டி, வைரலாகும் வீடியோ
நடிகர் பாண்டியனின் சினிமா பயணம் பற்றி அவர் மகன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகராக இருந்தவர் பாண்டியன். இவர் 1983ஆம் ஆண்டு தனது மண்வாசனை படத்தின் மூலம் பாண்டியனை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் இயக்குனர் சிகரம் பாரதி ராஜா. அதன் பின்னர் இவர் ஆயுசு நூறு, புதுமைப் பெண் என அடுத்தடுத்து ஹிட் படங்களாக கொடுத்து தமிழ் சினிமாவில் உச்சிக்கு சென்றார்.
அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுக்க தனது குரு இயக்குனர் பாரதிராஜாவினாலே அடுத்த ரஜினி எனப் பாராட்டப்பட்டார். பின்னர் ரஜினி நடித்த குரு சிஷ்யன் படத்தில் அவற்றுக்கு தம்பியாக நடித்தார். மேலும் அடுத்தடுத்து நல்ல படங்களில் நடித்த பாண்டியனின் ஆண் பாவம் என்ற படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
அதற்கு பின் இவர் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். இதற்கிடையில் இவர் பல காலம் தி. மு.க வில் இருந்தார். அதன் பின் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இவர் அ.தி.மு.கவில் தன்னை இணைத்தார்.
பாண்டியன் குறித்த தகவல்:
அங்கு ஏற்பட்ட நட்பினால் குடிப்பழக்கம் அவரை ஆட் கொண்டது. 80 படங்கள் வரை நடித்த இவர் அதன் பின்னர் கதையை சரியாக தேர்வு செய்யாமல் சினிமா வாழ்க்கையும் கெடுத்துக் கொண்டார். கட்சியிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் குடிக்க கூட காசு இல்லாத அளவிற்கு சென்றார். ஒரு கட்டத்தில் மஞ்சள் காமாலை வர கல்லீரல் கெட்டு விட்டது. அதன் பின் பாண்டியன் சிகிச்சை பலனில்லாமல் 2008ஆம் ஆண்டு உயிர் இழந்தார்.
பாண்டியன் மகன் பேட்டி:
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் பாண்டியனின் மகன், என்னுடைய அப்பா பத்தாவது வரைக்கும் படித்திருக்கிறார். பள்ளி பருவத்தில் அவர் ஒரு சண்டியர் மாதிரி தான் இருந்தார். அதற்கு பிறகு அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வளையல் வியாபாரம் செய்து கொண்டிருந்தாடீ. அப்போ வாரம் வாரம் கலெக்ஷனுக்கு போவார். அப்போதுதான் என்னுடைய அப்பா, பாரதிராஜா சாரை பார்த்து ஆட்டோகிராப் வாங்கப் போனார். உடனே அவர், என் அப்பா கையை நல்லா அழுத்தி பிடித்து, நீ யாரு? என்ன பண்ற?எல்லாம் விசாரித்து இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=tyuQFz7GLtU
பாண்டியன் சந்தித்த அவமானங்கள்:
பின் அவர், நான் உன்னை சினிமாவில் நடிக்க வைக்க டெஸ்ட் பண்ணனும் என்று சொல்லி என் அப்பாவை அழைத்து போனார். ஆனால், சித்ரா லக்ஷ்மணன் சார் காரில் என் அப்பாவை ஏற்றவில்லை. அப்போ பாரதிராஜா சார், அவனை பார்த்த போது இந்த உலகத்தையே மறந்து விட்டேன். அவனிடம் என்னமோ இருக்கு என்று சொல்லி கூட்டிட்டு போனார். அதற்கு பிறகு தேனியில் சூட்டிங் ஸ்பாட்டுக்கு போனபோது கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லிட்டு போனார். அப்பாவும் காத்துக் கொண்டிருக்கும் போது கமலா தியேட்டர் ஓனர், யார் யாரோ நடிக்க வரான். அங்கே போய் ஓரமா நில்லு என்று என் அப்பாவை சொல்லி இருக்கிறார்.
சினிமா அனுபவம்:
அப்பாவுக்கு ஒரு மாதிரியாக கஷ்டமாக இருந்தது. அதற்கு பிறகு கொஞ்ச நேரம் கழித்து பாரதிராஜா, ஒரு கைப்பிடி மண் கொடுத்து இதில் எத்தனை துகள்கள் இருக்கு என்று கேட்டிருக்கிறார். அதற்கு அப்பா, ஒரு 3500 இருக்கும் என்று சொன்னதும் நீதான் என் படத்தோட ஹீரோ என்று முடிவு பண்ணி விட்டாராம். முதல் படம் நடித்து முடித்து நாளைக்கு படம் ரிலீஸ் ஆகுது. அப்பாவுக்கு இன்னைக்கே பயம் வந்துவிட்டது. என்னை மக்கள் ஏற்பார்களா? நான் கேமராவில் அழகாக தெரிவேனா? என்றெல்லாம் ரொம்ப யோசித்தாராம். அடுத்த நாள் மக்களோடு மக்களாக படம் பார்க்க வந்தார். அங்கு அப்பாவை எல்லாம் தூக்கிக் கொண்டாடி இருந்தார்கள் என்று கூறினார்.