நடிகர் கமலஹாசனுக்கு பாண்டியராஜன் எழுதியிருக்கும் கடிதம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் பாண்டியராஜன். இவரை புதுமைக் கலை மன்னன் என்று தான் எல்லோரும் அழைப்பார்கள். இவர் கலைத்துறையின் மேலுள்ள ஈடுபாட்டால் தன்னுடைய இளம் வயதிலேயே திரைத்துறையில் சேர்ந்தார். மேலும், சினிமாவிற்கு தோற்றம், உயரம் முக்கியம் இல்லை என்பதை நிரூபித்த ஒரு கலைஞர்.

பாண்டியராஜன் என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது திருட்டு முளியும், வெள்ளந்தியான பேச்சும், விசுக் விசுக்கென நடக்கும் நடை தான். இவர் முதலில் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தார். பின் தனது 23 வயதிலேயே சினிமா உலகில் இயக்குனராக பிரபலம் அடைந்தார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் கன்னிராசி படம் மூலம் தான் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதனை தொடர்ந்து இவர் ஆண்பாவம், மனைவி ரெடி, நெத்தியடி, கபடி கபடி போன்ற 10 படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார்.

Advertisement

பாண்டியராஜன் திரைப்பயணம்:

அதுமட்டும் இல்லாமல் இவர் பிற கலைஞர்களையும் சினிமாவில் வளர்த்து இருக்கிறார். இப்படி இவர் தமிழ் சினிமாவில் படைத்த சாதனைகள் ஏராளம். நடுவில் பாண்டியராஜன் அவர்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார். தற்போது இவர் பிறகு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த அண்ணாத்த படத்திலும் பாண்டியராஜன் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்திருந்தது. இதனைத் தொடர்ந்து பாண்டியராஜன் அவர்கள் குணச்சித்திர கதாபாத்திரங்களில் படங்களில் நடித்து வருகிறார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாண்டியராஜன்:

இந்த நிலையில் நடிகர் கமலஹாசனுக்கு பாண்டியராஜன் எழுதியிருக்கும் கடிதம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பாண்டியராஜன் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் கமலஹாசனுக்கு எழுதிய கடிதம் குறித்து கூறியது, 1987 ஆம் ஆண்டு நாயகன் படம் வெளிவந்த போது நான் கமல் சாருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அந்த கடிதத்தை படித்த பிறகு கமலஹாசன் என்னை சந்தித்தார். அப்போது அவர், உங்கள் கடிதத்தை படித்தேன். ரொம்ப மெனக்கட்டு எழுதி இருக்கிறீர்கள்.

Advertisement

கமல்ஹாசன் சொன்னது:

அதன் பிறகு அவரின் காரில் என்னை ஏற்றிக் கொண்டு ஒரு நாள் முழுவதும் பேசினார். பின், நீங்கள் கடிதம் எழுத வேண்டுமென்ற அவசியம் இல்லை. நான் கூட கடிதம் எழுத நினைப்பேன். நாகேஷ் சார், சிவாஜியின் நடிப்பு குறித்து லெட்டர் எழுத வேண்டும் என்று நினைப்பேன். இதெல்லாம் நினைத்துக் கொண்டே இருப்பேன் அதற்குள் அவர்களின் அடுத்த படம் ரிலீஸ் ஆகிவிடும். இதனால் அது அப்படியே மறந்துவிடும். ஆனால், நீங்கள் மெனக்கட்டு எழுதி இருக்கிறீர்கள். நான் உங்களுக்கு பட வாய்ப்பு கொடுக்கிற ஆளும் இல்லை.

Advertisement

கமல் குறித்து சொன்னது:

நீங்களே ஒரு இயக்குனர். எனக்கும் நீங்கள் வாய்ப்பு கொடுக்க போவதில்லை. ஆனால், எனக்கு கடிதம் எழுதி இருக்கிறீர்கள் என்று என்னை பாராட்டியிருந்தார். பிறகு கொஞ்ச நாள் கழித்து அவருடைய படம் வெளியான போது அவருக்கு நான் கடிதம் எதுவும் எழுதவில்லை. அப்போது என்னை பார்த்த கமல், ஏன் எனக்கு கடிதம் வரவே இல்லை. படம் அவ்ளோ மோசமா என்று கேட்டார். இப்படி எப்போதுமே கமலஹாசன் ஜாலியாக இருப்பவர். தன்னைத்தானே செதுக்கி தமிழ் திரை உலகில் பல சாதனைகளை படைத்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement