தான் இறந்துவிட்டதாக யூடுயூப் சேனல் வெளியிட்ட வீடியோ – தன் ஸ்டைலில் பதிலளித்த பார்த்திபன்.

0
768
parthiban
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் பார்த்திபன். இவர் முதலில் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அதன் பின் தான் இயக்குனராக அவதாரம் எடுத்தார். மேலும், தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன்.இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. இதில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்த இந்த படம் விமர்சன ரீதியாக பலரின் கவனத்தை ஈர்த்தது. இதனை அடுத்து பார்த்திபன் அவர்கள் படம் இயக்குவதிலும், நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பார்த்திபன் இறந்துவிட்டதாக சமீபத்தில் யூடுயூப் பக்கம் ஒன்று புரளி ஒன்றை கிளப்பிவிட்டது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ இந்த வீடியோவை கண்ட பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் y மற்றவர்கள் வாழ்விலும் மகிழ்ச்சிக் கொடியேற்றுவோம்.YouTube மூலம் தவறான செய்தி செலுத்துபவர்களை மட்டுமே கொடி சாய்த்திருந்தேன்.

பொதுவில் எனத்தவறாக எடுத்து கொள்ளவேண்டாம்.வெகு காலமாக இவ்வன்மம் பல பிரபலங்கள் மீது தொடர்ந்து நடக்கிறது.அவர்களாவதுஇருப்பவரை போனவராக்கி வாங்கும் VIEWகம் அமைத்தவரையே காவு வாங்கும்>வருவதைத் தவிர்க்க இயலாது!தள்ளிப் போட ஆரோக்யம் கூட்டலாம். வாங்க fake-king வாக்கிங் போகலாம், மூச்சு பயிற்சி செய்யலாம், உடற்பயிற்சி செய்யலாம், மனிதத்துடன் அமைதியாய் வாழ முயற்சி செய்யலாம்! மகிழ்வோம்-மகிழ்விப்போம்!

-விளம்பரம்-

ஏதாவது சாதித்துவிட்டு போகிறார்கள்.இவர்களோ அவர்களின் நெத்தியில் வைக்கும் பொணக்காசினை தன் தொந்தி நிரப்ப-வதந்தி பரப்பி அதில் பீட்சா தின்கிறார்கள் நேற்று நான் இன்று எவரோ நாளை அவரோ? கட்டாயம் வந்தேத் தீரும் வந்தது போனவருக்குத் தெரியாது போனவரை இந்தத் வதந்’தீயில் எரியூட்ட முடியாது. நானிங்கு நலமே- நீங்கள் (YouTube Brutus)புருடாஸ் விட்டு பீட்சா திங்காமல்,சுக/சுப செய்திகள் இட்டு சுடுசோறு உண்டு நலமாய் வாழ வாழ்த்துகள்.

நட்சத்திரமாக இருப்பதில் பல உயரங்களும் மிக சில துயரங்களும் நிகழும்-நிகழும் சுபகிருது ஆண்டு தை 11-அதாவது இன்று 25/01/2023மதியம் ‘துருவ நட்சத்திரம் படபிடிப்பில் நான் நடித்ததைப் பார்த்து dir Goutham Menon “DEADly performance sir” என்று என்னைப் பாராட்டினார்.அதை யாரோ அன்பர்கள் தவறாக YouTube-ல் மரண ஓலமிட,உலகெங்கும் பலர் விசாரிக்க, அதில் ஒரு பெண்மணி “ சார் நீங்க இருக்கீங்களா?இப்படி ஒரு நியூஸ் உண்மையா?” என்று என்னிடமே கேட்கிறார்.நான் இல்லாவிட்டால் அவருக்கு பதிலே வராது. இருப்பதால் >>>> போட்டாலும் போட்டேன் நான் போட்டோவோட போட்டேன்!!! சிரித்துத்தான் வாழ வேண்டும்!

Advertisement