தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தமிழ் , தெலுங்கு, கன்னடம் என்று பல மொழி சினிமா துறையில் தனக்கென்று ஒரு சிறந்த பெயரை பெற்றவர். நடிப்பையும் தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமைகளை கொண்ட ஒரு அற்புத கலைஞர்.திரை வாழ்க்கை இவருக்கு சிறப்பாக அமைந்தாலும் இவரது முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. நடிகர் பிரகாஷ் ராஜ் வாழ்வில் இரண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
நடிகர் பிரகாஷ் ராஜிற்கு ஏற்கென்வே திருமணம் ஆகி விவாகரத்து ஆனது பின்னர் தன்னை விட 12 வயது இளையவரான போனி கபூரை தனது 47 வயதில் திருமணம் செய்து கொண்டார்.2010 ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரகாஷ் ராஜிற்கு 50 வயதில் வேதாந்த என்ற ஒரு ஆண் பிள்ளையும் பிறந்தது. இவரது முதல் மனைவி வேறு யாரும் இல்லை பிரபல நடிகையான லலிதா குமாரி தான்.
நடிகை லலிதாகுமாரி அவர்கள் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர் சி. எல். ஆனந்தனின் மகளும், நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை என்பது குறிப்பிடதக்கது.பின் இவர் 1994 ஆம் ஆண்டு நடிகர் பிரகாஷ் ராஜைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூஜா, மேக்னா என மகள்களும், சித்து என்ற மகனும் உள்ளனர். பின் 2004 ஆம் ஆண்டு சித்து இறந்து விட்டார். அதன் பின் லலிதா குமாரிக்கும்,பிரகாஷ் ராஜுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2009 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
தனது இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார் பிரகாஷ் ராஜ். இதுகுறித்து பேசியுள்ள அவர், லதாவுக்கும் எனக்கும் பிரச்சினை இருந்தது. பொய்களுடன் சேர்ந்து வாழக்கூடாது என்று பிரிந்து விட்டோம். நான் நேர்மையாக இருக்கிறேன். லதாவும் நானும் வெளிப்படையாக பேசி பிரிந்தோம். இதையெல்லாம் பார்த்தே எனது குழந்தைகள் வளர்ந்தனர். குழந்தைகளுடன் நிறைய மனம் விட்டு பேசுவது அவர்களை நம்முடன் நெருங்க வைக்கும் என்று கூறி இருந்தார்.