பொள்ளாச்சி சம்பவம் : வாக்குறுதி ஏற்ற பிரசன்னா.! பாராட்டை பெரும் ட்விட்டர் பதிவு.!
தமிழகத்தில் உள்ள கோயம்பத்தூர் , பொள்ளாச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள பாலியல் சம்பவம் தான் தற்போது நாடு முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பெண்களை ஆசை வார்த்தை பேசி அவர்களை உடலுறவில் ஈடுபட வைத்து வீடியோ எடுத்து, அதன் மூலம் அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த கும்பலை சேர்ந்த 4 பேர் சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
https://twitter.com/realradikaa/status/1105471798118834176
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஆனால், இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை பத்தாது எனவும் அரபு நாடுகளைப் போல இவர்களை மக்கள் மத்தியில் கொடூரமாக கொலை செய்து தண்டனை அளிக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சிலர் இன்னும் சுதந்திரமாக வெளியில் சுற்றி வருவதால் அவர்களையும் கைது செய்யக்கோரி பொள்ளாச்சியில் உள்ள மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
இதையும் படியுங்க : பொள்ளாச்சி விவகாரம்.! பெண்கள் ஏன் இந்த தவறை செய்கிறார்கள்.! வெளுத்து வாங்கிய Shamefully நடிகை.!
ஆனால், அவர்களையும் போலீசார் அடித்து கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் கொடூர சம்பவத்தை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பல்வேறு நடிகர் நடிகைகளும் சமூகவலைதளத்தில் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரசன்னாவும் தனது கருத்தினை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/Prasanna_actor/status/1107115552789585920
அதில் அவர், பொள்ளாச்சி கொடூர சம்பவத்தை அரங்கேற்றியர்களுக்கு சற்றும் தாமதிக்காமல் தண்டனை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், சத்தியமாக தனது மகனுக்கு ஒரு பெண்ணை எப்படி மரியாதையாகவும், கௌரவமாகவும் அணுக வேண்டும் என்பதை கற்றுக்கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார் பிரசன்னா. பிரசன்னாவிற்க்கு வயதில் மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.