நீயா ? எப்படி ? வரலக்ஷ்மியின் புகைப்படத்தை கிண்டல் செய்த பிரபல நடிகர். அதற்கு வரலக்ஷ்மியின் பதிலை பாருங்க.

0
19882
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘போடா போடி’ படத்தில் அறிமுகமான இவர் அதன்பின்னர் பல்வேறு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும் மற்றும் விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி படத்தில் வில்லியாக நடித்து அசத்தி இருந்தார். இந்த இரு கதாபாத்திரமும் ரசிகர்கள் அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

-விளம்பரம்-

சமீபத்தில் இவரது நடிப்பில் நீயா 2 திரைப்படமும் வெளியாகி இருந்தது . இந்த படங்களைத் தொடர்ந்து தற்போது இவர் ‘சேசிங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் பைக் ரைடர் ஆக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்காக வரலட்சுமி சரத் குமார் ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடித்துள்ளார். அதில் ஹீரோவை போல ஒரு நபரை தனது காலால் சுழட்டி அடிக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.

- Advertisement -

இதையும் பாருங்க : ஒரு ஆணியும் ***முடியாது. நீ வா தலைவா. விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர். எந்த ஊரில்னு நீங்களே பாருங்க.

இந்த வீடியோவை கண்ட பலரும் வரலட்சுமி சரத்குமார் இந்த முயற்சியினை வெகுவாக பாராட்டி வந்தனர் மேலும், ‘சேசிங்’ படத்திற்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அது போக கடந்த சில காலமாக வரலக்ஷ்மி உடற் பயிற்சிகளை செய்து தனது உடல் எடையையும் குறைத்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் வரலக்ஷ்மி சம்பத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் புடவை கட்டிகொன்டு குனிந்த தலையோடு இருக்கும் அந்த புகைப்படத்திற்கு ‘நான் வெளிப்படையாக வெட்கப்பட்ட அந்த சில நாட்கள்’ என்று கேப்ஷனும் செய்திருந்தார்.

-விளம்பரம்-

வரலக்ஷ்மியின் இந்த புகைப்படத்தை கண்டு பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் பிரசன்னா இந்த புகைப்படத்திற்கு “பார்ட்னர்.. நீயா… வெட்க்கப்படுறியா..?.. எப்படி..?” என கிண்டலாக கமன்ட் செய்துள்ளார். அதற்கு வரலக்ஷ்மி, அதனால் தான் அந்த நாட்களில் என்று குறிப்பிட்டிருக்கிறேன் என்று பதில் அளித்துள்ளர். நடிகர் பிரசன்னா, வரலக்ஷ்மியுடன் நிபுணன் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement