பாவாடை சட்டையில் தேவதையாய் குட்டி ஸ்னேகா – மகளின் முதல் தீபாவளி கொண்டாட்ட புகைப்படத்தை வெளியிட்ட ஸ்னேகா.

0
94121
prasanna
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு ரியல் லைப் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். ரஜினி – லதா, அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் குயூட் தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் சினேகா பிரசன்னா ஜோடி. 2009 ஆம் ஆண்டு சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் தான் இணைந்தார். பின் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது விகான் ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது. சினேகா-பிரசன்னா இருவரும் இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிநேகாவிற்கு பெண் குழந்தை பிறந்து. இருந்தது . இந்த செய்தியை ஒரு வித்யாசமான புகைப்படத்தை பதிவிட்டு நடிகர் பிரசன்னா ‘தை மகள் பிறந்தாள்’ என்று பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் குட்டி ஸ்னேகா பிறந்து விட்டார் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இது ஒரு புறம் இருக்க தங்களது மகளுக்கு ஆத்யந்தா என்று பெயர் வைத்துள்ளதாக நடிகர் பிரசன்னா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுக்கு பிறக்க போகும் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று ஆசைபட்டோம்.

அதனால் நாங்கள் ஆத்யா என்ற பெயரை வைக்கலாம் என்று யோசித்தோம். ஆனால். ,முதல் குழந்தை ஆண் குழந்தையாக போய்விட்டது. தற்போது என் மகளுக்கு ஆத்யா என்ற பெயரை தாண்டி வேறு எந்த பெயரையும் யோசிக்க தோணவில்லை. எனவே, கொஞ்சம் வித்யாசமாக ஆத்யந்தா என்று வைத்துளோம். அப்படி என்றால் ‘ஆதியும் அந்தமும் அற்றவள்’என்று அர்த்தம் என்று கூறி இருந்தார் பிரசன்னா. இப்படி ஒரு நிலையில் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement