சிறு வயதில் விஜய்யுடன் ஆடிய கிரிக்கெட்..! மறந்துபோன விஜய்.! சூர்யாவுடன் லண்டன்.! ப்ரேம்

0
264
vijay

நாட்டுப்புறப் பாட்டு’ படத்துக்குப் பிறகு சினிமாவுல அடுத்து என்ன பண்றதுனு தெரியலை. என் நண்பர் கமல் ராய்தான் சீரியல்ல நடிக்கிறியானு கேட்டார். உடனே ஓகே சொல்லிட்டேன். அதை டிவியில பார்த்துட்டு ஏவி.எம்.சரவணன் சார் என்னைக் கூப்பிட்டார். உள்ளே போனவுடனே, எஸ்.பி.முத்துராமன் சார் இருந்தார். கால்ஷீட் வாங்கிட்டு ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பளம்னு சொன்னாங்க. இப்படித்தான் என் சீரியல் வாழ்க்கை ஆரம்பிச்சது. அடுத்தடுத்து `அண்ணி’, `கங்கா யமுனா சரஸ்வதி’, `மனைவி’னு நிறைய வாய்ப்புகள் வந்தது.” பழைய நினைவுகளைச் சுமந்தபடியே உரையாடலைத் தொடங்குகிறார், நடிகர் பிரேம் குமார்.

prem kumar

- Advertisement -

விஜய்கூட `சர்கார்’, சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில உருவாகும் படத்துல நடிச்சிட்டு இருக்கீங்க. எப்படி இருக்கு அந்த அனுபவம்?

“`சர்கார்’ படத்துல விஜய் சார்கூட காம்போ சீன் இருக்குனு சொன்னதே எனக்கு சந்தோஷம். என்னைப் பார்த்ததும், “ `விக்ரம் வேதா’ படத்துல ரொம்ப நல்லா நடிச்சிருந்தீங்க”னு சொன்னார். பிறகு, ஸ்பாட்ல `ஹாய் நண்பா.. எப்படி இருக்கீங்க?’னு ரொம்ப ஜாலியாப் பேசுவார், விஜய்.

prem

ஆக்சுவலா, நானும் அவரும் சின்ன வயசுல ஒரே ஏரியாவுல இருந்தோம். ஒண்ணா கிரிக்கெட் விளையாடியிருக்கோம். அந்தக் கதையையெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்ல பேசிக்கிட்டு இருப்போம். ஆனா, அவருக்கு அதெல்லாம் மறந்துபோயிருக்கு. நான்தான் ஞாபகப்படுத்திச் சொன்னேன். சூர்யா – கே.வி.ஆனந்த் சார் சேர்ந்து வொர்க் பண்ற படத்தோட ஷூட்டிங்கிற்காக நானும், சூர்யாவும் லண்டன் போயிருந்தோம். அது, சூர்யாகூட நெருக்கமா பழக ஒரு வாய்ப்பா அமைஞ்சது. ரொம்ப டெடிகேஷனான நபர். எட்டு மணிக்கு ஷூட்டிங்னா, ஏழரை மணிக்கு ஸ்பாட்ல இருப்பார். ரெண்டு படங்களும் வித்தியாசமான அனுபவமா இருந்தது. ரெண்டு படத்திலும் இன்னும் எனக்கான போர்ஷன்ஸ் இருக்கு. திரும்ப விஜய், சூர்யா ரெண்டுபேரையும் மீட் பண்ண ஆர்வமா இருக்கேன்.