முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கடைசி ஜமீன்தார். தமிழகத்தில் ஜமீன் சொத்துக்கள் எலாம் முடக்கப்பட்டு ஜமீன்தார் முறையும் ஒழிக்கப்பட்ட நிலையில் இந்த சட்டதிருத்தத்திற்கு முன்பு கடைசியாக பட்டம் சூடியவர் முருகதாஸ் தீர்த்தபதி தான். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவைச் சேர்ந்த இந்த ஜமீனே புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயிலை நிர்வகித்து வந்தார்.
அதாவது இவர் தனது 3 வயதிலேயே ராஜாவாக மூடி சூட்டினார். தமிழகத்தின் கடைசி ஜமீன்தார் டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் சமீபத்தில் காலமானார்.

இந்நிலையில் சமீபத்தில் சிங்கம்பட்டி ஜமீன் காலமானதை தொடர்ந்து அவர் தனது பெரியப்பா என குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார் நடிகர் பிரேம். இது குறித்து நடிகர் பிரேம் அவர்கள் பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர் கூறியது, தமிழ்நாட்டின் கடைசி ராஜாவாக வாழ்த்து மறைந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி.

Advertisement

இவர் எனக்கு பெரியப்பா முறை வேண்டும். எனது அம்மாவோடு கூட பிறந்த சகோதரியை தான் முருகதாஸ் தீர்த்தபதி திருமணம் செய்தார். இவரை பற்றி பேசுவதற்கு முன்னர் ராமநாதபுரம் மன்னர் குடும்பம் பற்றி ஒரு சில விஷயங்களை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். ராமநாதபுரம் சண்முக ராஜேஸ்வர சேதுபதி மன்னருக்கு 5 மனைவிகள்.

அதில் 4-வது ராணி(மனைவி) கிருஷ்ணவேனி நாச்சியாருக்கு 4 பிள்ளைகள். எனது அம்மாவும் சிங்கம்பட்டி ஜமீன் மனைவியும் அக்கா தங்கைகள். அந்த வகையில் தான் அவர் எனக்கு பெரியப்பா வேண்டும். சமீப காலமாகவே இவர் புற்றுநோய்யால் பாதிக்கப்பட்டு வந்தார். பின் அவர் சிகிச்சை பெற்று வந்தும் உயிரிழந்துள்ளார். நாங்கள் சிங்கம்பட்டி அரண்மனைக்கு சென்று மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

Advertisement
Advertisement