பிரேம்ஜி திருமணம் செய்துகொள்ள இருக்கும் குறித்த மணப்பெண்ணை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் பிரேம்ஜி அமரன். இவர் சினிமா உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் வெங்கட்பிரபுவின் கங்கை ஆவார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், பின்னணி பாடகரும் ஆவார். மேலும், எல்லோருமே பிரேம்ஜிக்கு திருமணம் எப்போது? ஏன் நடக்கவில்லை? உண்மையாலே இவருக்கு திருமணம் ஆகுமா? என்று பல கேள்விகள் கேட்டு இருந்தார்கள்.

தற்போது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரேம்ஜிக்கு திருமணமாக இருக்கிறது. இவர் இந்து என்ற பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். இவர் சேலத்தை சேர்ந்தவர். இவர்களுடைய திருமணம் ஜூன் 9-ஆம் தேதி நாளை நடைபெறுகிறது. இவர்களுடைய திருமணம் திருத்தணியில் உள்ள முருகன் கோவில் தான் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்திற்கு முக்கிய பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
பிரேம்ஜி திருமணம் குறித்த தகவல்:
பல ஆண்டு காலமாக பேச்சுலர் ஆக இருந்த பிரேம்ஜி கூடிய விரைவில் திருமண வாழ்க்கைக்குள் செல்ல இருப்பதால் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தற்போது பிரேம்ஜியின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தான் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதோடு சோசியல் மீடியாவில் பலரும் பிரேம்ஜி திருமணம் செய்யும் பெண் யார்? அவர் நடிகையா? என்று பல கேள்வி எழுப்பி இருந்தார்கள். பி[இந்த இது தொடர்பாக நடிகரும், இயக்குனரும், பிரேம்ஜியின் அண்ணனுமான வெங்கட் பிரபு அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

வெங்கட் பிரபு அறிக்கை:
அதில் அவர், எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது.
“பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?” என்ற உங்கள் கேள்விக்குப் கல்யாணம் வரும் 9ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம். இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார்.

திருமணம் பற்றிய தகவல்:
எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை. எங்களுடைய பிரைவசியை மதித்து, இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணப்பெண் குறித்த தகவல்:
அதாவது, பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளும் இந்து சேலத்தை சேர்ந்தவர். இவர் ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இது காதல் கல்யாணம் என்று கூறப்படுகிறது. ரெண்டு பேருமே எப்படி சந்தித்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. இந்து தான் முதலில் பிரேம்ஜி இடம் காதலை சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகுதான் இருவருமே வீட்டில் சொல்லி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் திருத்தணியில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று இந்துதான் சொல்லி இருக்கிறார். இதை அப்படியே பிரேம்ஜி வீட்டிலும் சொல்லி சம்மதம் வாங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.






