அதுக்குள்ள தாத்தாவாகிட்டாரா, தனது பேரனுடன் கொஞ்சி விளையாடிய cute புகைப்படத்தை பகிர்ந்த ரஹ்மான்.

0
746
Rahman
- Advertisement -

தன் பேரனுடன் நடிகர் ரகுமான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90ஸ் நடிகர்களை யாரும் மறந்து இருக்க மாட்டோம். அதிலும், ஒரு சில 90ஸ் நடிகர்கள் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் ரகுமான். 1986 ஆம் ஆண்டு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய நிலவே மலரே என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

ஆனால், நடிகர் ரகுமான் அவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தான். ரகுமானின் முழுப்பெயர் ரஷின் ரகுமான். இவர் 1967ஆம் ஆண்டு துபாயில் பிறந்தவர். ஆனால், இவருடைய மூதாதையர் குடும்பம் கேரளாவின் மலப்புரத்தை சேர்ந்தவர்கள். இவர் 1983 ஆம் ஆண்டு ‘கூடவிடே’ என்ற மலையாள படதின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆனார். அந்த படத்தில் நடித்தற்காக கேரள அரசின் சிறந்த நடிகர் விருதினை ரகுமான் பெற்றார்.

- Advertisement -

ரகுமான் திரைப்பயணம்:

அதன் பின்னர் இவர் 1984ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் 16 மலையாள படங்களில் நடித்து அசத்தினார்.
பிறகு ரகுமான் அவர்கள் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தமிழில் இவர் நிலவே மலரே, புரியாத புதிர், புதுப்புது அர்த்தங்கள், புதிய ராகம், சங்கமம், வாமனன், பில்லா-2, துருவங்கள் பதினாறு என அன்றிலிருந்து இன்று வரை பல ஹிட் படங்களில் நடித்தார் ரகுமான்.

ரகுமான் குடும்பம்:

இதனிடையே ரகுமான் அவர்கள் மெகருநிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானுவின் தங்கை தான் இந்த மெகருநிஷா. மேலும், இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் ருஷ்டா, இரண்டாம் மகள் அலிஷா ஆவார். கடந்த ஆண்டு தான் நடிகர் ரகுமானின் மூத்த மகளான ருஸ்தாவுக்கும், அல்தாஃப் நவாப் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் தமிழக முதலவர் M.K.ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

ரகுமான் நடித்த படங்கள்:

தற்போது இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தில் மதுராந்தக சோழனாக நடித்திருக்கிறார். முதல் பாகத்தை தொடர்ந்து இன்று பொன்னியின் செல்வன் 2 படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. வெளியான முதல் நாளே இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தின் மூலம் ரகுமானுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்தும் இவர் சில படங்களில் நடித்து வருகிறார்.

ரகுமான் பேரன் புகைப்படம்:

இந்த நிலையில் instagram-யில் ரகுமான் பகிர்ந்து இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ரஹ்மானின் மூத்த மகளின் மகன் தான் அயான். தன் பேரன் . அயானுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தான் ரகுமான் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், அதுக்குள்ள நீங்கள் தாத்தா ஆகிவிட்டீர்களா! என்று ஆச்சரியத்துடன் புகைப்படத்திற்கு லைக்ஸ் போட்டு வருகிறார்கள்.

Advertisement