நீளமான முடி, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ராஜ்கிரண் – வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்.

0
2604
rajkiran
- Advertisement -

பொதுவாக “நல்லி எலும்பு” சாப்பிடுவது என்று சொன்னால் அனைவருக்கும் நியாபகம் வருவது நடிகர் ராஜ்கிரண். அதோடு ராஜ்கிரண் பற்றி தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மக்களிடையே பிரபலம் ஆனவர் நடிகர் ராஜ்கிரண்.ராஜ்கிரண் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரையில் பிறந்தவர். ராஜ்கிரண் குடும்பம் மிக எளிய குடும்பம். வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும் இவருடைய பெற்றோர்கள் இவரை ராஜாவாகதான் வளர்த்து வந்தார்கள். பின் ஒரு கட்டத்திற்கு மேல் இவர் தன்னுடைய குடும்ப சூழ்நிலையை புரிந்துகொண்டு சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தார்.

-விளம்பரம்-

இவர் சினிமா திரையுலகில் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். இவருடைய உண்மையான பெயர் காதர் மொய்தீன். திரை உலகிற்கு இவர் ராஜ்கிரண் என்ற பெயரை மாற்றிக் கொண்டார்.. இவர் இவ்வளவு பிரபலமாக இருந்தாலும் இதுவரை தமிழில் சினிமா திரை உலகில் 30 படங்கள் மட்டும் தான் நடித்துள்ளார். மேலும்,இவரே சில படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார். இவரது படங்கள் முதலில் கொஞ்சம் சரிவை சந்தித்தாலும் நாளடைவில் பிளாக்பஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவில் வெற்றி வாகை சூடியது. அதற்குப் பின்னர் தான் இவர் சினிமா துறையில் நடிக்கத் தொடங்கினார்.

- Advertisement -

இவர் பெரும்பாலும் கதாநாயகன் கதாபாத்திரத்தில் மட்டும்தான் நடித்திருப்பார். எவ்வளவு கோடி கொடுத்தாலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறுவார். அதுமட்டும் இல்லாமல் ராஜ்கிரண் அவர்கள் ஓடாத படங்களை வாங்கி வெற்றி படங்களாக மாற்றி உள்ளார்.1989 ஆம் ஆண்டு வெளிவந்த “என்ன பெத்த ராசாவே” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் அரண்மனைக்கிளி, என்ன பெத்த ராசா, நந்தா, சண்டக்கோழி, பாண்டவர் பூமி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். அதற்கு பிறகு பல படங்களில் நடித்தும், பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.

இவர் படத்தில் மட்டும்தான் பயங்கர டெரர். ஆனால், நிஜ வாழ்க்கையில் ரொம்ப அமைதியான,சாந்தமான மனிதர். இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் இவருடைய குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது.முதலில் கதாநாயகனாக ராஜ்கிரண் அவர்கள் நடித்திருந்தாலும் தற்போது படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவரது லேட்டஸ்ட் கிளிக் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் நீளமான முடி, சால்ட் அண்ட் பெப்பர் லுக்குடன் படு ஜோராக இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement