90 கால கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழந்தவர் நடிகர் ராமராஜன். ரஜினி, கமல் என்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த நிலையில் வெறும் அரை ட்ரவுஸரில் நடித்து அந்த படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓடவைத்த பெருமையெல்லாம் ராமராஜனை மட்டுமே சேரும்.நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே முன்னணி நடிகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்ததும் அந்தக் காலத்தில் மிகப் பெரிய சாதனைதான். அதிலும் இவர், கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த ‘கரகாட்டகாரன்’ திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

ராமராஜன் தன்னுடன் பல படங்களில் நடித்த நளினியை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. பின்னர் 2000 ஆம் ஆண்டு ராமராஜனை விவாகரத்து செய்துவிட்டார் நளினி.நடிகர் ராமராஜன் – நளினியின் மகன் ஆர் அருண். ராமராஜனும் நளினியும் விவாகரத்து செய்து கொண்டாலும், மகனின் திருமணத்தை சேர்ந்தே நடத்தினர். அருணுக்கும் பவித்திராவுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது.

Advertisement

மேலும், ராமராஜனின் மகள் அருணா, பிரபல தனியார் வங்கியில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ராமராஜனின் மகள், அருணா பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசியுள்ளதாவது, அம்மாவும் அப்பாவும் பிரியும்போது நானும் தம்பியும் ஏழாவது படிச்சிட்டிருந்தோம். எங்க முன்னாடி அவங்க சண்டையே போட்டதில்லை. பிரிவுங்கிறது அவங்க ரெண்டு பேரும் பேசி எடுத்த முடிவு. அதை எங்களுக்குப் புரியவெச்சாங்க. அம்மாவைப் பத்தி அப்பாவோ, அப்பாவைப் பத்தி அம்மாவோ எங்ககிட்ட ஒரு வார்த்தைகூட தப்பா பேசினதில்லை.

அம்மாவுக்கு அப்பா மேல வெறித்தனமான அன்பு உண்டு. ஒருவேளை அது வெறுப்பா மாறிடக்கூடாதுன்னே பிரிஞ்சாங்களோனு நினைப்பேன். அப்பாவும் அப்படித்தான். அவரைப் பார்க்கப் போனா முதல்ல ‘அம்மா எப்படி இருக்காங்க’னுதான் கேட்பார். இதையெல்லாம் நான் சொன்னா பலரும் நம்ப மாட்டாங்க, நடிக்கிறோம்னு சொல்வாங்க. ஆனா, அதுதான் நிஜம் என்று கூறியுள்ளார் அருணா.

Advertisement
Advertisement