பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி இந்த பிரபல நடிகை..? யார் தெரியுமா- போட்டோ உள்ளே

0
2749
Actress Tanya ravichandran

சினிமா துறையில் இருக்கும் பிரபலமான நடிகர் நடிகைகளின் வாரிசுகளோ,சொந்தங்களோ சினிமாவில் நடிப்பது ஒன்றும் ஆச்சர்யமான விஷயம் இல்லை. ஆனால் ஆவர் அவர்கள் சினிமாவில் அறிமுகமாகும் பட்சத்தில் அவர்கள் எந்த பிரபலத்துடன் என்ன சொந்தம் என்ற தெரிந்துவிடும்.

tanya

ஆனால் பழம் பெரும் நடிகரான ரவிச்சந்திரன் என்பவருக்கு ஒரு பேத்தி இருக்கிறார் என்றும். மேலும் அவர் இதுவரை 3 தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பதும் நம்மில் பல பேர் அறிந்திடாத ஒரு விஷயம் தான்.அந்த நடிகை வேறு யாரும் இல்லை தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “கருப்பன்” படத்தில் நடித்த தான்யா ரவிச்சந்திரன் தான்.

இவர் முதன் முதலில் தமிழில் அறிமுகமான படம் இயக்குனர் சசி குமார் நடிப்பில் 2016 இல் வெளியான “பலே வெள்ளையத்தேவா” என்ற படத்தில் தான்.அந்த படத்திற்கு பின்னர் இயக்குனர் ராதா மோகன் இயக்கிய பிரிந்தாவனம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

tanya actress

இவரது உண்மையான பெயர் அபிராமி ஸ்ரீராம் தான். இவர் மிஸ்கின் இயக்கத்தில் 2016 ஆம் வெளியாக இருந்த ஒரு படத்தில் நாடிக்யிருந்தாராம். அந்த படத்திற்காக மிஸ்கின் இவரது பெயரை தான்யா என்று மாற்றச் செய்தாராம். ஆனால், அந்த படத்தை எடுக்கும் போது இயக்குனர் மிஸ்கின் நடிகர் விஷால் நடித்த “துப்பறிவாளன்” படத்தில் பிஸியாக இருந்ததால் தான்யாவை வைத்து மிஸ்கின் எடுக்கவிருந்த படம் கைவிடபட்டது .