முடிந்தது ரியாஸ் கான் மகனின் திருமணம் – வெளியான Exclusive புகைப்படங்கள் இதோ

0
348
- Advertisement -

உமா ரியாஸ்கான் மகனுக்கு திருமணம் நடந்து முடிந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் ரியாஸ் கான். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடிக்கிறார். இவர் பெரும்பாலும் படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது ரியாஸ் கான் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ‘இனியா’ தொடரில் வில்லனாக நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் நடிகை உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உமா ரியாஸ் கான் அவர்கள் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நடிகையும் ஆவார். இவரும் பெரும்பாலும் படங்களில் வில்லி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார். மேலும் இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கூட பணியாற்றி இருக்கிறார்.

- Advertisement -

உமா ரியாஸ் கான்:

அந்த வகையில் இவர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக சமைத்து இருந்தார். இந்த நிகழ்ச்சியில் உமா இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். அதைத்தொடர்ந்து இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் இவர் சமையல், மேக்கப், நடனம், காமெடி போன்ற பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் இவருக்கு எக்கச்சக்கமான ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள்.

ரியாஸ் கான்- உமா குடும்பம்:

இந்த செலிப்ரட்டி தம்பதிகளுக்கு சாரிக் ஹாசன் மற்றும் சமந்த் ஹாசன் என்ற இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் இவருடைய மூத்த பிள்ளை சாரிக் ஹாசன் தற்போது சினிமா படங்களில் நடித்து வருகிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். இருந்தும் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் அமையவில்லை. இவர் பென்சில், டான், ஜிகிரி தோஸ்து, நேற்று இந்த நேரம் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

திருமணம் குறித்த தகவல்:

இந்நிலையில் கடந்த வாரம் நடிகை உமா ரியாஸ் கான் மகன் சாரிக் ஹாசனுக்கு திருமணம் ஆக இருக்கும் தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அடையாறில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் ஷாரிக் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது. இந்த திருமணத்தை எளிமையாக நடத்த உமா- ரியாஸ் கான் தம்பதி முடிவு செய்து இருக்கிறார்களாம். ஆனால், தனது மகன் திருமணம் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் இவர்கள் அறிவிக்காமல் இருந்தார்கள்.

சாரிக் ஹாசன் திருமணம்:

இதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை உமா ரியாஸ் கான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மருமகளை அறிமுக செய்திருக்கிறார். அவரது வருங்கால மருமகளின் பெயர் மரியா ஜெனிபர். சமீபத்தில் தான் எளிமையாக மெஹந்தி பங்சனை கொண்டாடி இருந்தார்கள். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்நிலையில் இன்று மாலை 4:00 மணி அளவில் சாரிக் ஹாசன்- மரியா திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. தற்போது இது தொடர்பான பிரத்தியோக புகைப்படங்கள் நமக்கு கிடைக்கப்பட்டிருக்கிறது.

Advertisement