சத்தம் இல்லாமல் நடக்க இருக்கும் நடிகர் ரியாஸ்கான் மகன் திருமணம் – எப்போது? எங்கு தெரியுமா?

0
590
- Advertisement -

நடிகை உமா ரியாஸ்கான் மகனுக்கு திருமணமாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் ரியாஸ்கான். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் பெரும்பாலும் படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது ரியாஸ்கான் படங்களில் மற்றும் சீரியலில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலான ‘இனியா’ தொடரில் வில்லனாக நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் நடிகை உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு வந்தாலும் நாளடைவில் ஏற்று கொண்டார்கள். உமா ரியாஸ்கான் அவர்கள் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நடிகையும் ஆவார்.

- Advertisement -

உமா ரியாஸ்கான் குறித்த தகவல்:

இவரும் பெரும்பாலும் படங்களில் வில்லி, குணசித்திர வேடங்களில் தான் நடித்து வருகிறார். அதோடு இவர் சின்னத்திரை நிகழ்ச்சியில் கூட பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் உமா இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். மேலும், இவர் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

ரியாஸ்கான்-உமா குடும்பம்:

அதில், இவர் சமைப்பது, நடனம், காமெடி போன்ற பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனாலே இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். மேலும், இந்த தம்பதிக்கு சாரிக் ஹாசன், சமந்த் ஹாசன் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கிறது. அதில் இவருடைய மூத்த மகன் சாரிக் ஹாசன் தற்போது சினிமா படங்களில் நடித்து வருகிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து இருந்தார். இருந்தும் இவருக்கு பெரிய அளவு பட வாய்ப்பு அமையவில்லை.

-விளம்பரம்-

உமா ரியாஸ்கான் மகன் திருமணம்:

இந்நிலையில் நடிகை உமா ரியாஸ்கான் மகன் சாரிக் ஹாசனுக்கு திருமணம் ஆக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வருகிற, ஆகஸ்ட் 8 ஆம் தேதி அடையாறில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் தான் சாரிக் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தை எளிமையான முறையில் உமா- ரியாஸ்கான் நடத்த இருக்கிறார்கள்.

திருமணம் குறித்த தகவல்:

இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு மகன் திருமணம் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் இவர்கள் அறிவிக்கவில்லை. பெரும்பாலானோருக்கு உமா மகனுக்கு திருமணம் நடக்கும் செய்தி தெரியவில்லை. அதோடு மணப்பெண் குறித்த விபரமும் தெரியவில்லை. திருமணத்திற்கு பிறகு உமா- ரியாஸ்கான் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement