Familyல ஒருத்தங்க preganant ஆனா மாறி படம் எடுத்தா controversial story, ஆனா ஒரு ஹீரோ இப்படி எல்லாம் நடிக்கலாம். Rj பாலாஜி காட்டம்.

0
485
Rjbalaji
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்களின் படங்களை ஆர் ஜே பாலாஜி விமர்சித்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஆர் ஜே பாலாஜி திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிகர், வானொலி ஒலிபரப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் கோவையில் ஊடகவியல் தொடர்பான படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றார். பின் இவர் ரேடியோ மிர்ச்சி அலைவரிசை மூலமாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கினார். ரேடியோ ஜாக்கியாக ஆர் ஜே பாலாஜி தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். அதற்குப் பிறகு பாலாஜி சென்னையில் உள்ள big-fm-ல் வேலைக்கு சேர்ந்தார்.

-விளம்பரம்-

இதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் ஆர் ஜே பாலாஜி சினிமாவிற்குள் நுழைந்தார். இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம் என்ற படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி பல படங்களில் நடித்தார். இருந்தாலும் இவர் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தான் நடித்து வந்தார். பின் தன்னுடைய கிண்டல் கேலித்தனமான நகைச்சுவை திறமையால் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். மேலும், எல்கேஜி படத்தின் மூலம் தான் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக தோன்றினார்.

- Advertisement -

ஆர் ஜே பாலாஜி நடித்த படங்கள்:

வெறும் அரசியலை கலாய்க்கும் படமாக மட்டும் இதனை எடுக்காமல் கொஞ்சம் சமூக கருத்தினையும் புகட்டியுள்ளார் பாலாஜி. இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தின் பின் பாலாஜிக்கு இன்னும் பல ரசிகர் கூட்டம் சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து இவர் மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்திற்கு பிறகு தான் ஆர் ஜே பாலாஜி தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தார்.

ஹிந்தி ரீமேக் படம்:

இதை தொடர்ந்து இவர் தற்போது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தான் ஆர் கே பாலாஜி இயக்கும் புதிய படத்தை பற்றிய தகவல் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக பிக்பாஸ் பிரபலம் சிவானி நாராயணன் கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில் தற்போது ஆர்ஜே பாலாஜி அவர்கள் வீட்ல விசேஷம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில் வெளியான இந்தி திரைப்படம் தான் ‘பதாய் ஹோ’. இந்த படம் 220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இதன் தமிழ் ரீமேக் படம் தான் வீட்ல விசேஷம். இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி, நடித்துள்ளார்.

-விளம்பரம்-

வீட்ல விசேஷம் படம் பற்றிய தகவல்:

இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்து. உள்ளனர். அதுமட்டும் இல்லாமல் ”வீட்ல விசேஷம்” என்ற பெயரில் ஏற்கனவே பாக்கியராஜின் படம் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரிடம் அனுமதி வாங்கிய பிறகு இப்படத்தில் அந்த டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கல்யாண வயதில் ஒரு பையன் இருக்கும்போது திடீரென்று அம்மா கர்ப்பமாகிறாள். இதனால் வீட்டில் உள்ள பலரும் குழப்பத்தில் என்ன செய்வதென்று புரியாமல் இருக்கிறார்கள்.

ஆர் ஜே பாலாஜி பதிவிட்ட பதிவு:

இது தான் படத்தின் கான்செப்ட். மேலும், இந்த படத்தின் போஸ்டர், ரிலீஸ் செய்தி வெளியானதைத் தொடர்ந்து இப்படிப்பட்ட கதையை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என நெட்டிசன் ஒருவர் ட்வீட் செய்திருந்தார். இதை பார்த்த பாலாஜி கூறியிருப்பது, ஆமா, ஃபேமிலியில் ஒருத்தங்க preganant ஆனா மாறி படம் எடுத்தா controversial story. ஆனால், ஹீரோ ரவுடி, டான், கொலைகாரன், திருடன், smugglerஆக நடித்தால் family subject படம் ! என குறிப்பிட்டிருக்கிறார். இப்படி பாலாஜி கூறியிருப்பது தமிழ் சினிமாவில் ரஜினி, அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்கள் நடித்திருந்த ரோல்களை பற்றி தான் என்று ரசிகர்கள் கமன்ட் போட்டு வருகின்றனர்.. அதுமட்டுமில்லாமல் இப்படி இவர் கூறியிருப்பதை குறித்து பலர் ஆதரவாகவும் நெகட்டிவ் கமென்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement