வெற்றிமாறனுக்கு ரஞ்சித்துக்கு வட சென்னையை பத்தி என்ன தெரியும் – பேட்டியில் கடுப்பான சாய் தீனா.

0
1248
dheena
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சாய் தீனா பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் குறித்து பேசிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. பொதுவாக சினிமாவில் ஒரு சில வில்லன் நடிகர்கள் மட்டுமே ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப் படுவது இல்லை. இருப்பினும் ஒரு சில வில்லன் நடிகர்கள் சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் வில்லன் நடிகரான தீனா தனது வில்லத்தனமான நடிப்பால் பல ரசிகர்களை கொண்டுள்ளார். கமல் நடித்த விருமாண்டி படத்தில் ஜெயில் வார்டனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தீனா.

-விளம்பரம்-

முதல் படமே கமல் படம் என்பதால் இவர் நடித்த பெரும்பாலான படங்களில் இவரது வில்லத்தனத்தையும் தாண்டி இவரது நடிப்பும் வெகுவாக பாராட்டபட்டது. விருமாண்டி படத்திற்கு பின்னர் தமிழில் வெளியான பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இதுவரை ஜில் ஜங் ஜக், தெறி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் தீனா. மேலும், தனுஷ் நடிப்பில் வெளியான ‘வட சென்னை’ படத்திலும் ஒரு முக்கிய வில்லனாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டபட்டது.

- Advertisement -

நடிப்பையும் தாண்டி இவரது பேச்சுக்கு பல ரசிகர்களும் இருக்கிறார்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் இவர் சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்தார். அதே போல இவர் பங்கேற்கும் பல பேட்டிகளில் வட சென்னை மக்கள் குறித்தும், ஜாதி ஒழிப்பு குறித்தும் பேசி இருக்கிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தீனா, ரஞ்சித் சென்னையில் பிறந்தாரா, வெற்றி மாறன் சென்னையில் பிறந்தாரா ? அனைவரும் வட சென்னை பற்றி படம் எடுக்கிறார்கள். ரஞ்சித் ஆகட்டும் வெற்றி மாரன் ஆகட்டும் வட சென்னை பற்றி என்ன தெரியும் அவர்களுக்கு. நார்த் மெட்றாஸ் என்றால் என்ன ரவுடி பசங்களா என்ன என்று கோபமுடன் அந்த பேட்டியில் இருந்து சென்றார் தீனா. ஆனால், அந்த பேட்டியின் முழு வீடியோவில் பேசியுள்ள தீனா, சும்மா உங்களை கலாய்ப்பதற்காக தான் இப்படி பேசினேன் என்று கூறியுள்ளார். மேலும், வெற்றிமாறன் மற்றும் ரஞ்சித் குறித்து என்ன பேசியுள்ளார் என்பதை

-விளம்பரம்-
Advertisement