அக்னி நட்சத்திரம், ஜாமீன் கோட்டை போன்ற பல படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம்.

0
573
- Advertisement -

பழம்பெரும் நடிகர் சங்கரன் உடல் நலக் குறைவால் காலமாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பழம்பெரும் நடிகராக இருந்தவர் சங்கரன். இவருடைய முழு பெயர் ராமரத்தினம் சங்கரன். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனரும் ஆவார். இவர் முதலில் மேடை நாடகங்களில் தான் நடிக்க தொடங்கினார். அதற்கு பிறகு தான் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

-விளம்பரம்-

இவர் முதன்முதலாக ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் தேன் சிந்துதே வானம், தூண்டில்மேன், வேலும் மயிலும் துணை போன்ற படங்களை இயக்கியிருந்தார். அதற்குப்பின் இவர் புதுமைப் பெண், ஒரு கைதியின் டைரி, மௌன ராகம், அமராவதி, சின்ன கவுண்டர், அக்னி நட்சத்திரம், ஜமீன் கோட்டை போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

ரா.சங்கரன் குறித்த தகவல்:

அதுமட்டுமில்லாமல் பல முன்னணி நடிகைகளுக்கு தந்தை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். குறிப்பாக ரேவதி, கார்த்தி, மோகன் நடிப்பில் வெளியாகியிருந்த மௌன ராகம் படத்தில் ரேவதியின் தந்தையாக
சந்திரமவுலி என்ற கதாபாத்திரத்தில் சங்கரன் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு தான் வருகிறது.

ரா.சங்கரன் இறப்பு:

அதற்குப் பின் இவர் சில படங்களில் நடித்தார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். பின் 1999 ஆம் ஆண்டிற்கு பிறகு இவர் எந்த படத்தில் நடிக்கவில்லை. இப்படி இருக்கும் நிலையில் இன்று உடல்நல குறைவால் நடிகர் சங்கரன் இறந்திருக்கிறார். தற்போது அவருக்கு 91 வயது ஆகிறது. வயது மூப்பின் காரணமாக தான் சங்கரன் இறந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

இயக்குனர் பாரதிராஜா இரங்கல்:

மேலும், இவருடைய மறைவிற்கு திரை உலகினர் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா, “எனது ஆசிரியர் இயக்குனர் திரு.ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் கூறி இருக்கிறார்

Advertisement