கருணாஸை தொடர்ந்து மகனை சினிமாவில் களமிறக்கும் சந்தானம். அதுவும் இந்த படத்திலா ?

By Rajkumar · 9/12/2019

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். தற்போது நடிகர் சந்தானத்தின் மகனும் படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. காலகாலமாக சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாரிசுகளை சினிமாவில் நடிக்க வைப்பது வழக்கமான ஒன்று தானே. அந்த வகையில் நடிகர் சந்தானமும் சினிமா உலகில் தன் மகனை களம் இறக்குகிறார். நடிகர் சந்தானம் அவர்கள் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "லொள்ளு சபா" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தான் மக்களிடையே பிரபலமானார். இதற்கு பிறகு இவர் சினிமா உலகில் 'மன்மதன்' என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். பின்னர் படங்களில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். மேலும் அவருடைய நகைச்சுவை பேச்சுக்கும், டைமிங் பஞ்சுக்கும் பஞ்சமே இல்லை. தமிழ் சினிமா உலகிற்கு காமெடி நடிகனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் சந்தனம்.

இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைப்படத்தை தயாரித்தும் வருகிறார். மேலும், இவருடைய நகைச்சுவைக்கு பல விருதுகளை வாங்கி உள்ளார். ஆரம்பத்தில் இவருடைய சில படங்கள் தோல்வியில் முடிவடைந்தாலும் விடா முயற்சியால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சந்தானம் அவர்கள் நடித்த தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 ,ஏ1 போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெற்றி படங்களாக அமைந்தது. பின்னர் சந்தானத்தின் மார்க்கெட் வேற லெவல் உயர்ந்தது என்றும் சொல்லலாம். தற்போது சந்தானம் மற்றும் யோகி பாபு இவர்கள் இருவரும் இணைந்து டகால்டி என்ற திரைப் படத்தில் நடித்து உள்ளார்கள். மேலும், இந்த படம் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது தெரிய வந்து உள்ளது.

இதையும் பாருங்க : இந்த நடிகருடன் டேட்டிங் செல்ல விரும்புகிறேன். ட்விட்டரில் ஓப்பனாக தெரிவித்த ரைசா.

இதனை தொடர்ந்து டகால்டி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்தன் தான் டகால்டி படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படம் ஆக்ஷன்,காமெடி, காதல் என எல்லாம் கலந்த கலவையாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை ரித்திகா சென் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து உள்ளார். மேலும், வில்லன் கதாபாத்திரத்தில் ராதாரவி நடித்து உள்ளார். சந்தானத்தின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹேண்ட்மேட் பிலிம்ஸ் மற்றும் எஸ்.பி.சௌத்ரியின் 18 ரீல்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள் என்றும் தெரிய வந்து உள்ளது.

சந்தானம் மகன்

அதனைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் அவர்கள் மூன்று வேடங்களில் 'டிக்கிலோனா' என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. அதோடு இந்த படத்தில் சந்தானத்தின் மகனும் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன. மேலும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தன்னுடைய மகனை 'சிந்துபாத்' என்ற திரைப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அது மட்டும் இல்லாமல் நடிகர் கருணாஸ் அவர்களும் கூட தன்னுடைய மகனை சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான "அசுரன்" படத்தில் நடிக்க வைத்து உள்ளார். இப்படி வளர்ந்து வரும் நடிகர்கள் எல்லோரும் தங்களுடைய வாரிசுகளை சினிமா துறையில் களம் இறங்குகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full