இந்த நடிகருடன் டேட்டிங் செல்ல விரும்புகிறேன். ட்விட்டரில் ஓப்பனாக தெரிவித்த ரைசா.

0
43784
raiza

பிக் பாஸ் ரைசாவை யாராவது மறப்பார்களா??? ரைசா வில்சன் அவர்கள் தற்போது பல படங்களில் நடித்து கொண்டு பிசியாக உள்ளார். இந்நிலையில் .ரைசா வில்சன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ள கருத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி ஆகி உள்ளார்கள். நடிகை ரைசா வில்சன் பெங்களூரை சார்ந்தவர். மேலும், ரைசா அவர்கள் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே விளம்பரங்களில் நடிக்க தொடங்கினர். அதற்கு பின் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து இவர் பல விளம்பரங்களில் நடித்தும், மாடலிங் செய்தும் வந்தார். அதுமட்டும் இல்லாமல் ரைசா அவர்கள் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங்கில் மேலாளராகப் பணிபுரிந்து இருக்கிறார். இதனைத்தொடர்ந்து ரைசா அவர்கள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் தெற்கில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார்.

பின் ரைசா அவர்கள் 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார். அதற்குப் பிறகு தான் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய தமிழ் பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும், பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் ரைசா வில்சன். மேலும், அதே சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் ஹரீஷ் கல்யாண். இவர்கள் இருவருக்கும் கிசுகிசு உள்ளது என பல தகவல்கள் இணையங்களில் வந்தது. ஆனால், இவர்கள் இருவரும் அதெல்லாம் ஒன்றும் இல்லை. நாங்கள் நல்ல நண்பர்களாக தான் பழகி வருகின்றோம் என்று கூறினார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு ரைசா அவர்கள் 2018 ஆம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து “பியார் பிரேமா காதல்” படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இதையும் பாருங்க : ஜெய்ஸ்ரீயின் முதல் கணவரை பார்த்துள்ளீர்களா. முதன் முறையாக வெளியான புகைப்படம் இதோ.

- Advertisement -

இந்த படத்தில் இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரிக்கு வார்த்தைகளே இல்லை. அந்த அளவிற்கு இருந்தது. தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ரைசா கூறியது, நான் ஹரிஷ் கல்யாணை டேட்டிங் செய்ய விரும்புகிறேன். மேலும், இது தமிழ்நாடு மக்களுக்கான என்னுடைய பதிவு என்று வெளிப்படையாக போட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் உறைந்து போய் உள்ளார்கள் என்றும் சொல்லலாம். மேலும், ஏன் இவர் இப்படி போட்டுள்ளார்?? மீண்டும் இவர்கள் காதலித்து வருகிறார்களோ?? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இதனை தொடர்ந்து ரைசா வில்சன் அவர்கள் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் என்ற தகவல் வந்து உள்ளது.

தொடர்புடைய படம்

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து ரைசா வில்சன் அவர்கள் அலைஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ‘காதலிக்க யாருமில்லை’ என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தை மணி சந்ரு என்பவர் இயக்கி வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இந்த படங்கள் எல்லாம் அடுத்த வருடம் திரையரங்கிற்கு வெளியாகும் என்ற தகவலும் வெளிவந்து உள்ளது. மேலும், ரசிகர்கள் ரைசாவை படத்தில் காண்பதற்கு மிக ஆவலாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement