செப்சிஸ் நோய், செயலிழந்த உறுப்புக்கள், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சரத்பாபு – சோகத்தில் திரையுலகம்.

0
1539
Sarath
- Advertisement -

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர் சரத்பாபு உடல் நலக்குறை காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமாகி இருக்கிறார்.தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் சரத்பாபு. இவர் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டினப்பிரவேசம் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிறமொழிப் படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் கமலஹாசன், ரஜினிகாந்த், சத்யராஜ், விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கமலஹாசன், ரஜினிகாந்த்துக்கு நண்பர் என்றாலே இவரைத்தான் பெரும்பாலும் போடுவார்கள். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிறமொழிப் படங்களில் நடித்து இருக்கிறார்.கடைசியாக இவர் தமிழில் வசந்த முல்லை என்ற படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

அதற்குப்பின் இவர் சின்னத்திரை சீரியல் நடித்திருந்தார். இப்படி இவர் கிட்டதட்ட 50 வருடங்களுக்கும் மேலாக 200 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் நடிகர் சரத்பாபு கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இவருடைய சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் என உடல் உறுப்புகள் நோய் அலர்ஜியால் பாதிக்கப்பட்டிருந்தததால் இவர் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையும் பெற்று வந்திருந்தார்.

இதனை தொடர்ந்து அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகியது. அதோடு இவர் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரை குடும்பத்தினர் ஹைதராபாத்துக்கு மாற்றி இருக்கின்றனர். இவருக்கு சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் தான் இவர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியது.

-விளம்பரம்-

இதனை இவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டுஇருந்தது. இவருடைய உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்து இருந்தனர். இதனால் திரையுலக நண்பர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலருமே இவர் கூடிய விரைவில் குணமாகி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக ஒரு செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.

ஆனால், அது பொய்யான தகவல் என்றும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் மருத்துவனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு இன்று சிகிச்சை பலனின்றி காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 71. இவரது இறப்பிற்கு பல்வேரு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement