தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறாரா வரலக்ஷ்மி..! அப்படி என்ன செய்தார் தெரியுமா..?

0
851
Actress varalakshmi

நடிகர் சிம்பு நடிப்பில் ‘போடா போடி ‘ என்ற படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி . அந்த படத்திற்கு பிறகு “தாரை தப்பட்டை , விக்ரம் வேதா” போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிப்பை தாண்டி தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கியுள்ளார் நடிகை வரலக்ஷ்மி.

Varalakshmi-Sarathkumar

- Advertisement -

பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத் குமாரின் மகளான நடிகை வரலக்ஷ்மி, சில ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். சமீப காலமாக சினிமாவில் எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகை வரலக்ஷ்மி, சொந்தமாக ‘சக்தி’ என்னும் அமைப்பை துவங்கி அதன் மூலம் பெண்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

கடந்த மார்ச் மாதம் மகளீர் தினத்தன்று கூட நடிகை வரலக்ஷ்மி, ஊனமுற்றோர்களுக்கு இலவச 3 சக்கர வாகனம், புடவைகள், நிதிஉதவி என்று என்று பல்வேறு பொருட்களை வழங்கி இருந்தார். ஆனால் நடிகை வரலக்ஷ்மி, தான் அரசியலுக்கு வருவதற்கான அடித்தளமாக இந்த உதவிகளை செய்து வருகிறார் என்று பலரும் கூறிவந்தனர்.

varalakshmi

இந்நிலையில் இந்த கூற்றை மெய்ப்பிக்கும் விதத்தில் நடிகை வரலக்ஷ்மி தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்துவிட்டார். அதன் முதற்கட்டமாக சமீபத்தில் பாஜாக கட்சியின் பொதுச்செயலாளர் முரளிதரராவ் முன்னிலையில் பாஜக கட்சியில் இணைந்துள்ளார் நடிகை வரலக்ஷ்மி. ஏற்கனவே தனது தந்தையான சரத் குமார் ஒரு கட்சியை நடத்திவரும் நிலையில், அவரது மகள் தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளது ரசிகர்களை சற்று வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement