குன்னூரில் எஸ்டேட்டில் மிகப்பெரிய பங்களா கட்டி இருக்கும் சத்யராஜ் . ஹாலிடேஸ்க்கு இங்க தான் போவாங்களாம்.

By Rajkumar · 30/6/2022

“கட்டப்பா” என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை தன்பக்கம் கட்டிப் போட்டவர் சத்யராஜ். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்தது. கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் நடிகராக அறிமுகமாகி இருந்தார். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் சத்யராஜ். இவர் இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

இவர் ஆரம்பத்தில் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்தார். தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதிலும் பிரபாஸின் பாகுபலி படத்தின் மூலம் இவர் மீண்டும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்து இருந்த வீட்ல விசேஷம் என்ற படத்தில் சத்யராஜ் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : இன்னும் ரெண்டு வருஷத்துக்கு இருப்பேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் - தன் தந்தையின் இறப்பு குறித்து கலங்கிய பூ ராமுவின் மகள்.

வீட்ல விசேஷம் படம்:

பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பதாய் ஹோ’ என்ற படத்தின் ரீமேக் தான் வீட்ல விசேஷம். இந்த படம் ஹிந்தியில் 200 கோடி வரை வசூலித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இதை தமிழில் வீட்ல விசேஷம் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி, நடித்து இருக்கிறார். இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்து இருக்கிறார்.

சத்யராஜ் நடிக்கும் படங்கள்:

மேலும், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்து இருக்கின்றனர். மேலும், இந்த படத்தில் சத்யராஜின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது இவர் பல படங்களில் பிசியாக கமிட்டாகி நடித்து வருகிறார். அதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பிரின்ஸ் திரைப்படமும் ஒன்று. இந்த படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளது.

சத்யராஜின் மகள் :

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் மரியா, சத்யராஜ் உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தை அனுதீப் இயக்கி வருகிறார். சிபிராஜ் என்ற ஒரு மகனும் மற்றும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். சிபிராஜ் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் திவ்யா அப்படி இல்லை. சின்ன வயதில் படங்களில் நடிக்க ஆசை பட்டாலும் பின்னர் வேறு துறைக்கு மாறிவிட்டார் திவ்யா.

குன்னூரில் இருக்கும் சத்யராஜின் பங்களா :

தனது அப்பாவினை போலவே இவரும் ஒரு நாத்திகவாதி. இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிசனிஸ்ட்களில் ஒருவர் சத்தியராஜ் மகள் திவ்யா. நியூட்ரிஷன் துறையில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச அளவில் நியூட்ரிஷன் துறையில் பல கான்பெரன்ஸ் நடத்தியுள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் குன்னூரில் தங்கள் குடுமபத்துக்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full