இன்னும் ரெண்டு வருஷத்துக்கு இருப்பேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் – தன் தந்தையின் இறப்பு குறித்து கலங்கிய பூ ராமுவின் மகள்.

0
534
pooramu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ராமு. இவர் இயக்குனர் சசி இயக்கத்தில் வெளிவந்த பூ என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். இந்த படத்தில் இவர் வெள்ளந்தியான கிராமத்து தந்தையாகவே திகழ்ந்தார். இதனை அடுத்து இவர் நீர்பரவை, வீரம், ஜில்லா,நெடுநல்வாடை,பரியேறும் பெருமாள் போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தார். இப்படி தொடர்ந்து இவர் பல படங்களில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

-விளம்பரம்-

இதனால் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தார். சில தினங்களுக்கு முன் நடிகர் ராமுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நடிகர் ராம் உயிரிழந்து விட்டார். இவருடைய இறப்பு ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இவருடைய இறுதி மரியாதையை அவருடைய மகள் மகாலட்சுமி தான் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் பாருங்க : கிழக்கு சீமையிலே ‘ஆத்தங்கரை மரமே’ பாடல் ஞாபகம் இருக்கா. அந்த நடிகை தான் இது. இப்பவும் எப்படி இருக்காங்க பாருங்க.

ராமு மகள் அளித்த பேட்டி:

இந்நிலையில் ராமுவின் மகள் மகாலட்சுமியிடம் பேட்டி எடுக்கப்பட்டிருந்தது. அதில் அவர் தன்னுடைய அப்பா குறித்து கூறியிருந்தது, அப்பா என்று சொன்னாலே எல்லையற்ற அன்பு தான். யாராவது உதவி என்று கேட்டு வந்திட்டால் இல்லை என்று சொல்லமாட்டார். முடிந்தவரைக்கும் பண்ணி தருவார். முடியவில்லை என்றாலும் நண்பர்கள் மூலம் செய்து தருவார். அவருடைய உழைப்பும், உதவும் குணமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். நாடக குழு, கட்சிப்பணி ,ஆட்டோ ஓட்டுனர், பிரின்டிங் வேலை, நடிகர் என கடைசி மூச்சு வரைக்கும் அவர் உழைத்துக் கொண்டே தான் இருந்தார்.

-விளம்பரம்-

இறப்பதற்கு முன்பு கூட அவர் ராட்சசி படம் இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கும் படத்திற்காக மூன்று நாள் சூட்டிங் போயிட்டு வந்தார். அப்படி ஒரு கடின உழைப்பாளி. ஆனால், என்னுடைய அப்பா மிகவும் கண்டிப்பானவர். நானும் என் கணவரும் வில்லிவாக்கத்தில் வசித்தாலும் வாரம்தோறும் என்னுடைய அப்பாவை பார்க்க போய்விடுவோம். படங்களில் அப்பாவை பலவிதங்களில் பார்த்து இருக்கலாம். ஆனால், எங்களிடம் ஒரே மாதிரிதான் இருப்பார். அதுவும் கண்டிப்பாக இருப்பார். எதுவாக இருந்தாலும் சரி என்றால் சரிதான், தப்பு என்றால் தப்பு என்று வெளிப்படையாக சொல்லி விடுவார்.

அன்பை செயற்கையாக அவருக்கு காட்டத் தெரியாது. அவரின் கண்டிப்பு அக்கறை நிறைந்ததாகவும், அர்த்தமாகும் இருக்கும். அதே நேரம் என் பொண்ணு மீது அவர் அதிக அன்பு காட்டுவார். அவர் என் மகளிடம் மட்டுமில்லாமல் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள குழந்தைகளுடனும் விளையாடுவார். வீட்டில் எப்போதும் சாக்லேட் வைத்திருப்பார். அதனால் அவரை சாக்லேட் தாத்தா என்று குழந்தைகள் கூப்பிடுவார்கள். மேலும், அப்பாவுக்கு மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் என்றால் ரொம்ப பிடிக்கும். அவங்க போட்டோவையும் வீட்டில் ஓவியமாக தொங்க விட்டிருக்கிறார். அவங்க ஓவியத்தை காட்டி குழந்தைகளுக்கு நிறைய சொல்லிக் கொடுப்பார்.

அதுமட்டுமில்லாமல் குழந்தைகளிடம் ஜாதி பார்க்க கூடாது, எப்போதும் பகுத்தறிவோடு இருக்கணும், பகுத்தறிவோடு நடக்கணும் என்று சொல்லிக் கொடுப்பார். உழைத்துக் கொண்டிருந்த அப்பாவுக்கு முதுமையின் காரணமாக அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. தொடர்ந்து ஹோமியோபதி மருத்துவம் எடுத்துக் கொண்டு இருந்தார். மருத்துவமனையில் சேர்க்க அளவுக்கெல்லாம் உடம்பு முடியாமல் போக வில்லை. ஆனால், கடந்த வாரம் சாதாரணமாக உடம்பு சரியில்லை என்று தனியார் மருத்துவமனைக்கு போய் ஊசி போட்டு வந்தார். அன்று இரவு உடம்பு இன்னும் மோசமாக இருந்தது. கடைசியாக நான் அப்பாவை பார்க்க வந்தபோது டெஸ்ட் எடுத்தேன்.

ஒன்னும் பிரச்சனை இல்ல இன்னும் ரெண்டு வருஷத்துக்கு இருப்பேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னார். அந்த சிரிப்பு அதுக்குள்ளே மறைந்துவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதேபோல் நான் செத்துட்டா எந்த சடங்கும் பண்ண கூடாது. அப்படியே கொண்டுபோய் சேர்த்து விடலாம் என்று சொன்னார். அவர் சொன்ன மாதிரியே இறுதிச் சடங்கும் செய்யவில்லை. கற்பூரம் மட்டும் கொளுத்தி மரியாதை செலுத்தினோம். அதேபோல் அப்பாவுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க வில்லை. எல்லோருக்கும் ரொம்ப நன்றி என்று கண்கலங்கியபடி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

Advertisement