ஹெச்.ராஜாவின் சர்ச்சை கருத்து ! நாங்கள் சவாலுக்கு ரெடி ! சத்தியராஜ் அதிரடி- வீடியோ உள்ளே

0
3516
- Advertisement -

திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நேற்றுமட்டும் கம்யூனிச தலைவரான லெனின் சிலை உடைத்து எறியப்பட்டது. இந்நிலையில் ஹெச்.ராஜா தமிழகத்திலும் விரைவில் பெரியார் சிலை தகர்த்தெறியப்படும் என்று சமூகவலைத்தளமான டிவீட்டரில் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

-விளம்பரம்-

Sathyaraj

- Advertisement -

பாஜகவின் தேசிய செயலாளரான ஹெச்.ராஜாவின் இந்த கருத்திற்கு தமிழகம் முழுதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமூகவலைத்தளத்தில் ஹோச்.ராஜாவை கடுமையாக ஒருசாரார் விமர்சிக்க மற்றொருபுறம் அரசியல் கட்சி தலைவர்களான ஸ்டாலின்,சீமான்,குஷ்பு,திருமாவளவன்,கீ.வீரமணி,சுபவீ மற்றும் பலரும் ஹெச்.ராஜாவின் பதிவுக்கு கடும் கண்டனங்களை பதிவுசெய்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

விவகாரம் இவ்வளவு விபரீதமானதை தொடர்ந்து ஹெச்.ராஜா சத்தமில்லாமல் தனது பதிவை அழித்துவிட்டார்.இந்நிலையில் தமிழ்தேசியத்தின் மீதும் திராவிட கொள்கைகளின் மீதும் பற்றுள்ள நடிகர் சத்தியராஜ் ஹெச்.ராஜாவிற்கான தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

-விளம்பரம்-

சத்தியராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் மிகவும் கோபமாகவும் சில கருத்துக்களை பேசியுள்ளார்.
நாங்கள் சவாலுக்கு ரெடி என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் ஹெச்.ராஜா தனது கருத்தினை திரும்ப பெற்று உடனடியாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும், அரசாங்கமும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.

Advertisement