அமைதி படை படத்தில் சீமான் நடித்த காட்சியை பார்த்துள்ளீர்களா. இதோ வீடீயோவை பாருங்க.

By Rajkumar · 30/3/2020

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பரீட்சயமானவர். சீமான் அவர்கள் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் அரசியலில் குதித்து விட்டார். தற்போது சீமான் அவர்கள் முழு நேர அரசியல்வாதியாக திகழ்ந்து வருகிறார். இவர் சி. பா. ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமையேற்று நடத்தி வருகிறார். இவர் சோசியல் மீடியாவின் சர்ச்சை நாயகன்.

இவர் போடும் கூட்டங்களில் எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சமே இல்லை. அந்த அளவிற்கு எதாவது ஒரு விஷயத்தை பேசி விட்டு சோசியல் மீடியாவில் சர்ச்சைகளை கிளம்புவார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் சத்யராஜ் நடித்த அமைதி படை படத்தில் நடித்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் பாருங்க : படிக்க தெரியாது, இருப்பினும் பரவை முனியம்மா பாடல் வரிகளை உள்வாங்கி பாடுவார் தெரியுமா?

இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அமைதி படம். சத்யராஜ், கஸ்தூரி, ரஞ்சிதா, மணிவண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இது நகைச்சுவை மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை பாலச்சந்திரன் தயாரித்தார். இசைஞானி இளையராஜா இசையமைத்து உள்ளார்.

https://www.youtube.com/watch?v=uvmjCWKVq6o

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் அமைதி படத்தில் ஒரு சில காட்சியில் நடித்து உள்ளார். தற்போது இந்த படத்தில் சீமான் நடித்த காட்சி புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு சீமான் நடித்த படத்தின் காட்சி வெளியாகி உள்ளது.

இதுமட்டுமல்ல அமைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் நாகராஜா சோழன் எம் ஏ, எம் எல் ஏ என்ற பெயரில் வெளியானது. ஆனால், இந்த படம் அமைதிப்படை படம் போல வெற்றியடையவில்லை. மேலும், இந்த படத்தில் நடிகர் சீமான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full