‘சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி’ என்ற ஒரு பாடலின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் கட்டிப்போட்டவர் பரவை முனியம்மா. தமிழ் திரைப்படங்களில் நடிகையாகவும், நாட்டுப்புற பாடகியாகவும் திகழ்ந்து விளங்கியவர் பறவை முனியம்மா. இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை என்னும் ஊரை சேர்ந்தவர். அதனால் தான் இவரை ‘பரவை முனியம்மா’ என்று அழைக்கிறார்கள். இவர் தமிழ் சினிமா உலகிற்கு விக்ரம் நடிப்பில் வெளிவந்த “தூள்” எனும் படத்தின் மூலம் தான் அறிமுகமானார். பின் பல படங்களில் நடித்தார்.
சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்த அதே தருணத்தில் பரவை முனியம்மாவுக்கு வயது முதிர்வால் உடல்நலகுறைவு ஏற்பட்டது. சமீபத்தில் தான் இவர் உடல் நலம் இன்றி காலமானார். இவருடைய இறப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இந்நிலையில் பரவை முனியம்மா அவர்கள் தூள் படத்தின் போது சொன்ன விஷயம் கேட்டு அனைவரும் அசந்து போனார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது.
2003 ஆம் ஆண்டு தரணியின் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்தது தூள் படம். இந்த படத்தில் விக்ரம், ஜோதிகா, ரீமாசென், பரவை முனியம்மா, விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் பரவை முனியம்மா அவர்கள் நடித்தும், பாடியும் இருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ஆறு பாடல்களையும் கவிஞர் அறிவுமதி எழுதியுள்ளார். இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்து உள்ளார்.
இந்நிலையில் முதலில் இந்த படத்தில் பட வைப்பதற்கு கவிஞர் அறிவுமதி, வித்யாசாகர் இருவரும் ஆலோசனை செய்து இருந்தார்கள். அப்போது ஒரு முறை பயணத்தின் போது பரவை முனியம்மாவின் குரலைக் கேட்டதால் ‘சிங்கம் போல’ பாடலை பரவை முனியம்மா அவர்களை வைத்து பாட வைக்கலாம் என முடிவு செய்தார்கள். பின் ரெக்கார்டிங்க்கு பரவை முனியம்மா அவர்களை அழைத்து வந்தார்கள்.
அப்போது சங்கர் மாதவன், சுஜாதா இருவரும் ‘ஆசை ஆசை இப்பொழுது’ என்ற பாடல் பாடி இருந்தார்கள். அந்த பாடலை 4 டேக்கில் பாடி முடித்தார்கள். பரவை முனியம்மாவிடம் இதுதான் உங்க பாட்டு மூன்று முறை பார்த்து பாடி வாசித்து விட்டு வாருங்கள் என்று சொன்னார்கள். ஆனால், முனியம்மா எனக்கு படிக்க தெரியாது. ஒரு தடவை வாசித்து, மெட்டு போட்டு காட்டுங்கள் அப்படியே நான் மனசுக்குள் உள்வாங்கி பாடி வருகிறேன் என்று கூறினார்.
பிறகு மதிய உணவு வேளை முடிந்த பின் இந்த ரெக்கார்டிங் பணி தொடர்ந்தது. அப்போது பரவை முனியம்மா அவர்கள் ஒரே டேக்கில் பாடி அனைவரையும் அசத்தியுள்ளார். இது பரவை முனியம்மா பாட்டியின் தனித்திறமை. இவர் இவ்வுலகை விட்டு நீங்கினாலும் இவரின் பாடல்கள் மக்கள் மனதில் நீங்காமல் உள்ளது.
இவர் காதல் சடுகுடு, பூ, தேவதையை கண்டேன் என 25 திரைப்படங்களுக்கு மேல் குணச்சித்திர நடிகையாகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். மேலும்,இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராமத்து சமையல் நிகழ்ச்சியை கூட தொகுத்து வழங்கியுள்ளார். சொல்லப்போனால் இவருடைய நாட்டுப்புறப் பாடலுக்கு பல பேர் அடிமை. இவர் இந்தியாவில் மட்டுமல்லாமல் லண்டன், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று நாட்டுப்புற கலையை மேம்படுத்தி உள்ளார்.