எங்களுக்கு இருக்கறது ஒரே ஒரு வீடு தான்.ஆனா அதுவும். நடிகர் பாக்கியராஜ் மகன் சொன்ன ஷாக்.

0
112557
shanthanu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகரும், இயக்குனரும் திகழ்ந்து வருகிறார் பாக்யராஜ். நடிகர் பாக்யராஜுக்கு சாந்தனு என்ற மகனும் சரண்யா என்ற மகளும் உள்ளனர். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் சாந்தனும் ஒருவர். இவர் 1998 ஆம் ஆண்டு பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த “வேட்டிய மடிச்சு கட்டு” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இவர் 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து உள்ளார். நடிகர் சாந்தனு, இளைய தளபதி விஜய்யின் தீவிர ரசிகர். இது பலருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-
Image result for shanthanu bhagyaraj and bhagyaraj"

- Advertisement -

இந்நிலையில் நடிகர் சாந்தனு அவர்கள் சமீபத்தில் நடந்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியது, சினிமா உலகில் நான் பல கூறியது, கற்றுக் கொண்டேன். சொல்லப்போனால் முதலில் என்னுடைய படங்கள் பிளாக்பஸ்டர் அடித்து இருந்தால் நான் தலை கால் புரியாம ஆடி இருப்பேன். நிறைய விஷயம் தெரிந்து இருக்க மாட்டேன். கொஞ்சம் அடி பட்டால் பின்னால் தான் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.

நான் விஜய் அண்ணாவ என்னுடைய அண்ணன் தான் பார்க்கிறேன். எந்த பிரச்சனையாக இருந்தாலும் நான் முதலில் விஜய் அண்ணா கிட்ட தான் சொல்லுவேன். அது பணப் பிரச்சினையா இருந்தாலும் சரி, வேற ஏதாச்சு மன கஷ்டமாக இருந்தாலும் நான் அவர் கிட்ட தான் சொல்லுவேன். எல்லாருமே பாக்கியராஜ் பையன் அவங்களுக்கு என்ன பணப் பிரச்சனை இருக்காது. அவங்க ஹை லேவெல் என்று சொல்லுவாங்க. சினிமா உலகில் மற்றும் மக்கள் மத்தியில் பேருக்கு தான் பாக்கியராஜ். எங்களுக்கு என்று இருக்கிறது ஒரே ஒரு பிராப்பர்டி தான். அது அப்பா பேர்ல இருக்கிற வீடு தான். அந்த வீடும் கடன் வாங்கித் தான் கட்டினோம்.

-விளம்பரம்-

வீடியோவில் 6:28 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்

எல்லோரும் பாக்கியராஜ் என்ற பெயரை மட்டும் தான் பார்க்கிறார்கள். அதுக்குள்ள அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று யாரும் பார்ப்பதில்லை. அப்ப விஜய் அண்ணா நண்பா எல்லாருடைய வாழ்க்கையிலும் இது எல்லாம் இல்லனா எப்படி நண்பா. இது எல்லாம் இருந்தா தான் வாழ்க்கை என்று என் முதுகில் தட்டிக் கொடுப்பார். எப்ப அவர் கிட்ட பேசினாலும் அவர் என்னை பார்த்ததும் எனக்கு முதுகில் தட்டிக் கொடுப்பார். அப்ப எனக்கு ஒரு எனர்ஜி கிடைக்கும் என்று கூறினார்.

தளபதி விஜய்யின் பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் அவர்கள் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் அவர்கள் மாஸ்டர். பேராசிரியராக நடித்து வருகிறார். நடிகர் சாந்தனு இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடித்து வருகிறார். இவர்களுடன் விஜய் சேதுபதி, சாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா, கௌரி கிஷன், சஞ்சீவ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து உள்ளார்கள்.

Advertisement