தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளியின் பெயரை என் மகனுக்கு சூட்டியது பெருமை – சிறு வயதிலேயே சிபி ராஜூக்கு பெருமை சேர்த்த மகன்.

0
927
sibiraj
- Advertisement -

தமிழ் சினிமாவை பொறுத்த வரை பாலிவுட்டை போல பல வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர். விஜய் துவங்கி, சாந்தனு வரை தமிழ் சினிமாவில் ஏராளமான வாரிசு நடிகர்கள் இருந்தாலும் அதில் விஜய், சூர்யா, கார்த்தி என்று ஒரு சிலர் மட்டுமே தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்து இருக்கின்றனர். 80, 90 காலகட்டத்தில் நடித்த நடித்த எத்தனையோ முன்னணி நடிகர்களின் வாரிசுகள் வரிசையில் சிபி ராஜும் ஒருவர். கோவை மாவட்டத்தில் பிறந்து ,எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர ரசிகராக இருந்து தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் சத்யராஜ். இவரது மகனான சிபிராஜ் ஸ்டூடன்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் பல்வேறு படங்களில் நடித்திருந்தலாம் எந்த படமும் இவருக்கு கைகொடுக்கவில்லை. இருப்பினும் இவரது நடிப்பில் வெளியான லீ திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தின் மூலம் சத்தியராஜ் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். நடிகர் சிபிராஜ் அவரது தந்தை சத்யராஜுடன் இணைந்து பல படங்களில் இருவரும் பல படங்களில் நடித்தார்.

- Advertisement -

சிபிராஜ் குடும்பம் :

ஆனாலும் இவர் நடித்த பெருமபாலான படங்கள் தோல்வியடைந்து. இவர் நடித்த ஒரு சில படங்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆனாலும், இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் தன் தந்தையை போல் சினிமாவில் பிரபலமாகவில்லை.நடிகர் சிபிராஜ் கடந்த செப்டம்பர் மாதம் 2008 ஆம் ஆண்டு ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு தீரன் என்ற மகனும் பிறந்தார்.

பதக்கங்களை வென்ற மகன் :

சிபிராஜ் மகன் தீரன் டேக்வோண்டா எனப்படும் தற்காப்பு கலையை கற்றுவருகிறார். தீரன் கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் 9 ,10ம் தேதிகளில் புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வோண்டாபோட்டியில் கலந்து கொண்டு உள்ளார். அங்கு நடந்த போட்டிகளில் வென்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று உள்ளார். இந்த நிலையில் தனது மகனுக்கு தீரன் என்று பெயர் வைக்க காரணத்தை கூறியுள்ளார் சிபிராஜ்.

-விளம்பரம்-

பெருமைபட்ட சிபி :

நடிகர் சிபிராஜ் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை குறித்து எழுதியுள்ள பதிவில், ”இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்து தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளி! இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமை படுகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார். இதை கண்ட பலரும் தீரன் சின்ன மலைக்கு வாழ்த்துக்களை கூறினர்.

விளையாட்டில் சாதிக்கும் சினிமா வாரிசுகள் :

இவர் மட்டுமல்ல மாதவன் மகன், தலைவாசல் விஜய் மகள் என்று பலரும் விளையாட்டு துறையில் பல பதக்கங்களை வென்றவர்கள் தான். பொதுவாக நடிகர்கள் தங்கள் பிள்ளைகளை சினிமாவில் ஒரு பெரிய ஆளாக வர வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால், இவர்களை போன்ற நடிகர்கள் தங்கள் பிள்ளைகளின் திறமைகளை கண்டறிந்து அவர்களை அவரவர் போக்கில் வளரவிடுவது பாராட்டுக்குரிய விஷயம் தான்.

Advertisement