சிவா நடித்த முதல் படம் எது , எந்த நடிகர் கூட தெரியுமா ?

0
4857
Shiva
- Advertisement -

நடிகர் சிவா ரேடியோ ஜாக்கியாக இருந்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர். தமிழ்ப்படம், கலகலப்பு உள்ளிட்ட பல நல்ல படங்களில் நடித்துள்ளார். 1988ஆம் ஆண்டு உடுமலைபேட்டையில் பிறந்தவர் சிவா.

-விளம்பரம்-

Mirchi-Shiva

- Advertisement -

சிவாவிற்கு சுத்தமாக படிப்பு வராது. இதனால் பத்தாம் வகுப்பில் கோட்டைவிட்டு விட்டார். அதன் பின்னர் சென்னை வந்து சின்ன சின்ன நாடகங்களில் கலந்துகொண்டு தனது நடிப்பு திறமையை வளர்த்து இருக்கிறார். இதில் ஒரு நாடகத்தை பார்த்து மிர்ச்சி எப்.எம்மில் இருந்து இவரை அழைத்து ரேடியோ ஜாக்கியாக வேலை கொடுத்துள்ளனர்.

இதன் காரணமாக இந்த வேலையை பார்த்துக்கொண்டே படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார் சிவா. 2001ல் ஷாம் நடித்து வெளிவந்த 12B என்னும் படத்தில் நடித்தார் சிவா. இது தான் இவருடைய முதல் படமாகும்

-விளம்பரம்-

Actor-Siva

அதன் பின்னர் விசில், என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் தனது ரேடியோ ஜாக்கி வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து சென்னை 600028 படத்தின் ஆடிசனில் கலந்துகொள்ள சென்றார். அங்கு சென்று இயக்குனர் வெங்கட் பிரபுவை பார்த்து ஒரு கவிதை கூறியுள்ளார்.

இந்த கவிதையை கேட்டவுடன் சிவாவை செலக்ட் செய்துவிட்டார் வெங்கட் பிரபு. மேலும், அந்த கவிதையை படத்திலும் வைத்துவிட்டார் வெங்கட்பிரபு. அதன் பின்னர் தமிழ்ப்படம், வணக்கம் சென்னை, சரோஜா, வா கோட்டார் கட்டிங், கலகலப்பு ஆகிய பல படங்களில் நடித்தார்.

Shiva

Shiva-actor

தற்போது தமிழ்படம் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார் சிவா. இந்த படமும் முதல் பாகத்தை போன்றே வித்யாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஒரு போஸ்டர் வெளியாகி சமீபத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

Advertisement