மனோஜ் பாரதிராஜாவின் மறைவு குறித்து நடிகர் சூரி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது ஒட்டுமொத்த கோலிவுட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் இயக்குனர் இமயம் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவு செய்தி தான். சமீபத்தில் தான் இவர் இதய பிரச்சினை காரணமாக சிகிச்சை எடுத்திருந்தார். சிகிச்சைக்கு பிறகு இவர் ஓய்வு நிலையில் இருந்தார்.

பின் திடீரென்று நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மனோஜ் உயிரிழந்தார். தற்போது இவருக்கு 48 வயது தான் ஆகிறது. இவருடைய மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள கபாலீஸ்வரர் நகரில் தான் பாரதிராஜாவினுடைய வீடு இருக்கிறது. அங்குதான் மனோஜ் பாரதிராஜாவின் இறுதி சடங்குகள் நடைபெற நடைபெற்று இருக்கிறது. பிரபலங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்கள்.
மனோஜ் பாரதிராஜா மறைவு:
அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பருவமே நேரில் சென்று இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் மனோஜ் பாரதிராஜாவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூரி, நான் மனோஜிடம் அடிக்கடி பேசுவேன். விருமன் படத்தில் அவருடன் நான் சேர்ந்து நடித்திருக்கிறேன். படப்பிடிப்பின் போது அவர் கேரவனுக்கு வந்து என்னிடம் ரொம்ப ஜாலியாக பேசிக் கொண்டிருப்பார்.
https://www.youtube.com/watch?v=Xvges7N1gc8
சூரி சொன்ன விஷயம்:
அவர் எனக்கு ஒரு நல்ல கதை வைத்திருக்கிறேன் என்று சொன்னார். அப்போது அவர் திருச்சியில் படப்பிடிப்பு ஒன்றில் இருப்பதால் சென்னைக்கு வந்து உன்னை சந்திக்கிறேன் என்று சொன்னார். அவருடைய மனைவி, குழந்தைகள், அப்பாவிற்கு இறைவன் தான் ஆறுதலாக இருக்க வேண்டும். பாரதிராஜா அப்பாவிற்கு இப்படி ஒரு சுழல் வந்திருக்கவே கூடாது. இறைவன் தான் அவருக்கு ஆறுதலாக இருக்க வேண்டும். என்னால் எதுவும் பேச முடியவில்லை என்று ரொம்ப எமோஷனலாக கூறி இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=JHRbhJYjuas
மனோஜ் பாரதிராஜா:
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் மனோஜ் பாரதிராஜா. இவர் தாஜ்மஹால் படத்தில் தான் நடிகன் ஆகி இருந்தார். இருந்தாலும் அவரால் தந்தை அளவிற்கு சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியவில்லை. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனரும் ஆவார். கடந்த ஆண்டு இவர் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கி வெளியிட்டு இருந்தார். இந்த படத்தில் பாரதிராஜாவும் நடித்து இருந்தார். இந்த படம் சுமாரான விமர்சனத்தை பெற்று இருந்தது.

சூரி திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு இருக்கிறார் சூரி. இவர் சீரியலில் தான் நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் தன்னுடைய விடாமுயற்சினால் தற்போது ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். இவர் முதன் முதலாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’ என்ற படத்தின் மூலம் தான் ஹீரோ ஆனார். அதனை தொடர்ந்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.






