-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

சூரியின் சகோதரர் மகளின் திருமணம் – முன்னின்று நடத்தி வைத்த சூரி. ஆஜரான Sk, Vjs

0
5988
soori

தன் உடன் பிறந்த சகோதரரின் மகள் பிறந்தநாளை சூரி முன்னின்று நடத்தி வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகரான சூரி ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக், சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் கலாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம். அதுபோல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயன்படுத்து காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

-விளம்பரம்-

தமிழில் உள்ள முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்துவிட்டார் சூரி. ஆனால், சமீப காலமாக இவரது காமெடி மக்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தி வருகிறது, இருப்பினும் வரிசையாக பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார் நடிகர் சூரி.

தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக படு பிட்டாக மாற்றியுள்ளார் சூரி. சூரிக்கு ஒரு சகோதரர் இருக்கிறார், அதுவும் சூரி பிறந்த சில நிமிடங்களில் பிறந்த தம்பி அவர். சமீபத்தில் தான் சூரியே இதை தெரிவித்து இருந்தார்.

Sivakarthikeyan's warm gesture for friend Soori!
-விளம்பரம்-

அதே போல சூரிக்கு ஒரு அண்ணன் இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் சூரியின் அண்ணன் மகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. சூரியின் குடும்பம் கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையாக இருந்து வருவதால், வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் நடிகர் சூரி முன் நின்று நடத்தி வருகிறார். அதேபோலவே அண்ணன் மகள் திருமணத்துக்கான மொத்த ஏற்பாட்டையுமே சூரிதான் கவனித்திருக்கிறார்.

-விளம்பரம்-

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கருணாஸ், விமல், ‘குக்கு வித் கோமாளி’ புகழ், தங்கதுரை, ராமர், சாலமன் பாப்பையா, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பலர் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news