அஜித்தை போல ஷூட்டிங் ஸ்பாட்டில் சமைத்த சூரி. வைரலாகும் வீடியோ.

0
1837
ajith-soori
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூரி. இவர் 1999 ஆம் ஆண்டு வெளி வந்த நினைவிருக்கும் வரை என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இவர் 2009 ஆம் ஆண்டு வெளி வந்த வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் வரும் ஒரு பரோட்டா காமெடி காட்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானர். அதனால் இவரை இன்று வரை பரோட்டா சூரி என்று தான் அழைக்கிறார்கள். அதனை தொடர்ந்து நடிகர் சூரி அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும், வடிவேலு, சந்தானத்திற்கு பிறகு தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

தமிழில் விஜய், அஜித், சூர்யா என்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார் சூரி. சமீப காலமாகவே நடிகர் சூரி அவர்களின் படம் மிகப் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. இதனாலே நடிகர் சூரி அவர்கள் தற்போது மிகவும் தெளிவாக கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இரா. சரவணன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா இன்னும் பல நடிகர்கள் நடித்து வரும் பெயரிடாத படத்தில் நடிகர் சூரி நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சூரி அவர்கள் அங்குள்ளவர்களுக்கு தன் கையால் பஜ்ஜி செய்து கொடுத்து உள்ளார்.

- Advertisement -

அவர் பஜ்ஜி செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வந்து கொண்டு இருக்கும் தல அஜித் அவர்களும் இதே மாதிரி தான் தன்னுடன் இருப்பவர்களுக்கு தன் கையால் பிரியாணி செய்து பரிமாறுவார். தற்போது அஜித்துக்கு பிறகு நடிகர் சூரி செய்து வருகிறார் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது நடிகர் சூரி அவர்கள் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயிண்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் கதை நடிகர் சூரி வழக்கமாக நடிக்கும் காமெடி சப்ஜெக்ட் போன்று இல்லாமல் சீரியஸான கதைகளத்தை கொண்டது. மதுரையை மையமாக கொண்ட கதையில் நடிகர் சூரி நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞனாக நடிக்கவிருக்கிறார். இந்த படம் குறித்த தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

-விளம்பரம்-
Advertisement