திருமதி செல்வம் தொடருக்கு முன்பாகவே சூரி நடித்துள்ள சீரியல் – இதோ புகைப்படம்.

0
9884
soori
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு காமெடியன்கள் ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அவ்வளவு ஏன் வைகைபுயல் வடிவேலு கூட ஆரம்பத்தில் கௌண்டமணியின் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான். காமெடி நடிகர் சூரி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக், சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் கலாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம்.

-விளம்பரம்-

அதுபோல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயன்படுத்து காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதை வைத்துகொண்டே இது வரை பல படங்களில் இவரது காமெடியை ஹிட் அடிக்க வைத்துள்ளார். தமிழில் உள்ள பெரும்பான்மையான நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்துவிட்டார் சூரி. ஆனால், சமீப காலமாக இவரது காமெடி மக்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தி வருகிறது.

- Advertisement -

இருப்பினும் வரிசையாக பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார் நடிகர் சூரி. இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார் சூரி. ஆனால், அந்த படத்திலும் சூரியின் காமெடி அவ்வளவாவக எடுபடவில்லை.நடிகர் சூரி ஒரு முன்னணி காமெடியனாக வளம் வருவதற்கு முன்பாக சிறு சிறு கதாபாத்திரத்தில் முகம் காண்பித்து வந்தார்.

பிரபு தேவா நடித்த ‘நினைவிருக்கும் வரை ‘ ,’ஜேம்ஸ் பாண்டு’ , ‘தீபாவளி’ போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல பல சீரியல்களிலும் நடித்துளளார் சூரி. அதேபோல மைதிலி, ராஜராஜேஸ்வரி,ஜென்மம் எக்ஸ் வீட்டுக்கு வீடு லூட்டி போன்ற பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார். பலரும் இவர் முதலில் நடித்த சீரியல் திருமதி செல்வம் என்று தான் நினைத்து இருக்கிறார்கள் ஆனால் அதற்கு முன்பாகவே இவர் அல்லி ராஜ்ஜியம் என்ற தொடரில் நடித்து இருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement