தப்பு தப்பாக பேசி குழந்தைகளிடம் அடிவாங்கும் சூரி. கலகல வீடியோ இதோ.

0
1451
- Advertisement -

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவினால் 2902 பேர் பாதிக்கப்பட்டும், 68 பேர் பலியாகியும் உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள்.

-விளம்பரம்-

கொரோனாவினால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், திரைப்பிரபலங்கள்,சமூக ஆர்வலர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து விதமான படப்பிடிப்பு வேலைகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

இதனால் பிரபலங்கள் அனைவரும் வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக உடற்பயிற்சி, வீட்டு வேலை, ஜோக்ஸ், புத்தகம் படிப்பது போன்ற பல்வேறு வேலைகளை செய்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பரோட்டா சூரி அவர்கள் ஊரடங்கு உத்தரவின் காரணமாக தினமும் தன் வீட்டில் நடப்பவற்றை வீடியோவாக எடுத்து பதிவிட்டு வருகிறார்.

தற்போது அவர் தன்னுடைய குழந்தைகளிடமிருந்து ஆங்கிலம் படிப்பது எப்படி என்பது குறித்து ஒரு வீடியோவை பதிவிட்டு அதில் படித்த குழந்தைகள் தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லித் தாருங்கள் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தான் காமெடி நடிகர் சூரி வீட்டில் தனது மகன் மற்றும் மகளுடன் இணைந்து பிரியாணி செய்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. தற்போது இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். அனைவரும் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருங்கள். கொரோனா வைரஸை ஒழிக்க அரசாங்கம், காவல்துறை,மருத்துவர்கள் என அனைவரும் தங்கள் உயிரை பணய வைத்து போராடி வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் சீரியலின் மூலம் தனது பயணத்தை துவங்கி தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சூரி. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement